யாழில் கண்கவர் நிகழ்வுகளுடன் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்

உலக சுற்றுலா தினம் வடமாகாண சுற்றுலா துறை அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இத்துடன் சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் புகையிரத வீதியில் இருந்து காலை 9 மணியளவில் வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது. பின்னர், யாழ். வைத்தியசாலை வீதியூடாக சென்று கே.கே.எஸ் வீதியூடாக பண்ணைவரை சென்று நிறைவடைந்தது. தனியார் சுற்றுலா நிறுவனங்களையும் இணைத்து...

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 214 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதிலேதும் சம்பந்தப்பட்டவா்களினால் வழங்கப்படாத நிலையில் சர்வதேசம் தமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும் என கோரி இருநாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். வவுனியா கந்தசாமி...
Ad Widget

எவரையும் உதாசீனம் செய்யும் நோக்கம் கூட்டமைப்புக்கு கிடையாது: இரா. சம்பந்தன்

‘எவரையும் உதாசீனம் செய்யாமல் எல்லோரிடமும் நாங்கள் பேசி தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்களில் ஒருமித்து நாங்கள் தீா்மானங்களை எடுக்க விரும்புகிறோம்’ என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை ஜெயா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது....

கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கு: இரத்த மாதிரிகள் சமர்ப்பிப்பு!

கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை வழக்கில் இரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் மேரி கம்சிகா கொலை வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பதில் நீதிவான் இ.சபேஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட இரத்த மாதிரியும், சந்தேக நபர்களிடம் இருந்து...

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கைது!

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, கஹாவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கிய...

மன்னாரில் சட்ட விரோதமாக அமைக்கப்படும் விகாரை: ஜனாதிபதிக்கு கடிதம்!

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த பௌத்த விகாரையை எதிர்வரும் 29 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையிலேயே...

தியாகி திலீபன் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள்

தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை.... தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு யாழ் மாவட்டம் 2017 புரட்டாதி 24 தியாகி திலீபன் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் இந்திய அரசிடம் நீதி கோரி காந்திய வழியில் நீராகாரம் அருந்தாது தன்னுடலை மெழுகாய் உருக்கி...

ஆஸிக்கு எதிரான தொடர் இந்தியா வசம்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி தொடரை தன்வசப்படுத்தியது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என தொடரில் முன்னிலைபெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும்...

தமிழ் மக்களுக்காக சர்வதேச விசாரணைக்கான நீதிமன்றம் ஒன்று அவசியம் : எம்.கே. சிவாஜிலிங்கம்

இலங்கை அரசாங்கத்தின் இராணுவம் யுத்த குற்றம் புரிந்துள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தின் ஊடாக புலப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக இதுகுறித்து விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமே இந்து மதம் : அமைச்சர் விஜித் விஜயமுனி

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்து பௌத்த மதத்தை காப்போம் அதுபோன்று ஏனைய மதங்களுக்கும் பாதுகாப்பும் மதங்களை போதிப்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்படும் என்று நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி செய்சா தெரிவித்தார். மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 650 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர்...

வட்டுக்கோட்டை வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்துவைத்தார் ராஜித

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி கலாநிதி காந்தநேசன் ரதினி தலைமையில், இந்நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது. அத்துடன் யாழ். தீவக மக்களின் சுகாதாரசேவையை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு 68 மில்லியன் ரூபாய் நிதியுதவியில், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக அலகுக்கான இரண்டு மாடி கட்டடத்தொகுதியையும் சுகாதார அமைச்சர் திறந்துவைத்தார்....

சட்டக் கல்லூரிக்கான போட்டிப் பரீட்சை 30 ஆம் திகதி

இலங்கை சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2018 ஆம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காகவே இப்போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், குறித்த பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சகல பரீட்சார்த்திகளுக்குமான அனுமதி அட்டை கடந்த...

யாழ்ப்பாணத்தில் பலம் பெறவுள்ளோம்!! பஷில் ராஜபக்ச

எம்மிடம் உள்ள மக்கள் பலத்தினை நிரூபிக்க நாம் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தாலும், நாம் மக்கள் நீதிமன்றத்தில்...

சுகாதார அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்!

அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி சுகாதார வைத்திய பணிமனைக்கான விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் அமைச்சர், பிரதி அமைச்சர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள்...

வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை!

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் மக்களுக்கான எவ்வித சலுகைகளும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்டம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு சலுகை வழங்குவதற்கு...

காலம் வரும்போது மக்களே எங்களை அரசியல் செய்யச் சொல்வார்கள்: முன்னாள் போராளிகள்

காலம் பதில் சொல்லும் போது மக்களே எங்களை அரசியல் செய்யச் சொல்வார்கள். அதுவரை அரசியலுக்கு வரும் எண்ணம் எங்களுக்கு இல்லை என புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார். மூதூர் கிழக்கு கட்டைபறிச்சானில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கி தண்டித்துவிட துடிக்கிறது சிறீலங்கா அரசு!! : ஐ.நா.ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கி தண்டித்துவிட வேண்டுமென்ற நோக்கிலேயே சிறீலங்கா அரசு செயற்படுகின்றது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில் அம்பலப்படுத்தினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் விடையம் 5 இன் கீழ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

ஒற்றையாட்சி வேறு வடிவத்தில் தொடர்கிறது: தமிழ் சிவில் சமூக அமையம்

இலங்கை அரசியலில் வெளிப்படையாக சொல்லப்பட்டு வந்த ஒற்றையாட்சி கருத்தியல் வேறு வடிவங்களில் தொடர்கிறது என தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நெடுங்காலமாக பிற்போடப்பட்டு வந்த அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

தமிழர்கள் நடுத்தெருவில் விடப்படும் அபாயம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் மூலம், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்படப் போகின்றனர் என்பது புலனாகிறது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,...

சகல கடைகளிலும் இனி பியர், வைன் வாங்கலாம்!!

உயர் ரக மதுபான வகைகளாக கருதப்படும் வைன் மற்றும் பியர் என்பவற்றை விநியோகத்துக்கான அனுமதிப் பத்திரத்தின் சட்ட திட்டங்களை இலகுபடுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறை மாவட்ட பாராளுமன்ற...
Loading posts...

All posts loaded

No more posts