யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் முதலமைச்சரை நேரில் சந்தித்தார் டக்ளஸ்!

வைத்­தி­ய சி­கிச்­சைக்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவா­னந்தா நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்ளார். கடந்த நான்கு தினங்­க­ளுக்கு முன்­ன­தாக சிறு சத்­தி­ர­சி­கிச்­சை­யொன்­றுக்­காக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். தொடர்ந்தும் சிகிச்­சைகள் இடம்­பெற்­று­வரும் நிலையில் புதன்­கி­ழமை யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு சென்­றி­ருந்த...

இந்தியா செல்லும் வடமாகாணசபை உறுப்பினர்கள்!

16 வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பயணம்செய்யவுள்ளனர் என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம்தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லியில் எதிர்வரும் 8ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காகவே குறித்த குழுவினர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று(28) வடமாகாணசபையின் 106ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோதேமேற்கண்டவாறு தெரிவித்தார். புதுடில்லி பயணம்...
Ad Widget

வடக்கில் படை அகற்றும் எந்த தேவையும் இப்போது கிடையாது : இராணுவத் தளபதி

வடக்கிலிருந்து உடனடியாக இராணுவத்தை அகற்றும் எந்த தேவையும் இப்போது கிடையாது என இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று (28) கண்டியில் தெரிவித்தார். எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி இராணுவம் தனது 68ஆவது தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் நேற்று கண்டி தலதா மாளிகையில் பௌத்த மத ஆசீர்வாதங்களில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம்...

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணவகங்களில் பரிமாறப்படும் சில உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. உணவு தயாரிப்பதற்கு பிரதானமாக எரிவாயுவை பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து உணவுகளின் விலைகள் அதிகரிப்பதை தம்மால் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதன் அடிப்படையில்...

வித்தியா வழக்கு: 14 நாட்களுக்குள் மேன் முறையீடு

புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகள் போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரையும் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் குறித்த 7 கைதிகளையும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துச் சென்றுள்ளனர். தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி குறித்த 7 குற்றவாளிகளும் போகம்பர சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று அழைத்துச் சென்றுள்ளனர். வித்தியா...

தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பாக நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் தமது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய...

தனியார் காணியில் விகாரை!: சிவகரனை விசாரணைக்காக கொழும்பு வருமாறு புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு!

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி காலை 9 மணிக்கு விசாரணைக்கு வருமாறு, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் – மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து,...

வித்தியா வழக்கில் எழுவருக்கு மரண தண்டனை

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது. மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1...

சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க விஜயகலா முயற்சி: நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை விடயத்தில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்ட விதத்தை நீதிபதி இளஞ்செழியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இக் குற்றத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை காப்பாற்றுவதற்கு விஜயகலா முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இச் செயற்பாடு சந்தேகநபரை தப்பிக்க வைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதென நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, சுவிஸ்குமாரை தப்பிக்க வைப்பதற்கு...

வித்தியா படுகொலை இறுதித் தீர்ப்பு ; 3 நீதிபதிகளும் 13 சந்தேகநபர்களும் வருகை

வித்தியா கொலையுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களும் 3 நீதிபதிகளும் யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக எமது இணையத்தள செய்தியாளர் தெரிவித்தார். புங்குடுதீவு பாட சாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட் டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும்...

வலிகாமத்தில் டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு

யாழ். வலிகாமம் மேற்கு, தென்மேற்கு பிரதேசங்களில், டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த 70 பேர் வரை, கடந்த 25 நாட்களில் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதனால் குறித்த பிரதேசங்களில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். குறித்த பிரதேசங்களில், டெங்கு நுளம்பின்...

இந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள்

இந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள், கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2017ம் ஆண்டுக்கான, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஒக்டோபர் 5ம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வௌியாகவுள்ளன. இதேவேளை, 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான...

உயிருக்கு ஆபத்து! : வித்தியாவின் குடும்பத்தார்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபர்களில் ஒருவரைக்கூட விடுதலை செய்யக் கூடாதென வித்தியாவின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணைகளின் போதே பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இவர்களில் யாரேனும் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள்...

பருத்தித்துறையில் காட்டுமிரண்டியாய் மாறிய சிறியதந்தை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறியதந்தை மற்றும் சம்பவத்தை வேடிக்கை பார்த்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (25) காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சிறியதந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்குள்ளன...

இடைக்கால அறிக்கை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும்!

அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை விளக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை விரைவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இடைக்கால வரைபை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து அவற்றில்...

விமானங்களை வீழ்த்தும் 5 ஆயிரத்து 700 வெடிகுண்டுகள் மயிலிட்டியில் மீட்பு

காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும் போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றில் இருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் சுமார் 87 விமானங்களை...

தியாகதீபம் திலீபனுக்கு மக்கள் திரண்டு அஞ்சலி

இந்திய அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு நேற்று நல்லூரில் இடம்பெற்றது. நல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த தியாகதீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் வீரச்சாவை...

மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டி தமிழர்களை வாய்மூடச்சொல்கிறது மைத்திரி அரசு! :பொ.ஐங்கரநேசன்

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவு, தமிழ்மக்களின் தாயகம்,தேசியம், சுயநிர்ணயம் ஆகிய அரசியல் வேணவாக்களை மிக நாசுக்காக நிராகரித்துள்ளது. மாறாக, நாட்டில் ஏற்கனவே கோலோச்சுகின்ற பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை உறுதி செய்வதாகவே அமைந்திருக்கிறது. தமிழ்மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்தால் சிங்கள இனவாதத்தைத் தூண்டி மகிந்த ராஜபக்ச மீண்டும் பலம்பெற்று விடுவார் என்று அரசு தரப்புச் சொல்கிறது. மகிந்த என்ற...

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும்

ஊவா, வடக்கு, மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மாத்தளை, அநுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் பலத்த...
Loading posts...

All posts loaded

No more posts