- Saturday
- May 16th, 2026
வட பகுதிக்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை எனவும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு பெண்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற, யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கில் தமிழ்...
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் வடக்கின் பல பகுதிகளின் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கருதும் இலங்கை ராணுவம், தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பச்சை புல்மோட்டை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேசங்களில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றில் அகழ்வுப் பணிக்கான அனுமதியும் பெறப்பட்டு நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதலில் பச்சை...
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மஹிந்த அணி, அடுத்ததாக கிழக்கில் கருணா அம்மான் தலைமையில் களமிறங்கவுள்ளது. மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளரான பஷில் ராஜபக்ஷ தலைமையில், கடந்த மூன்று நாட்களாக வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன....
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று சுழலும் ஆடுகளத்தில் 136 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கையின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களுக்குள் சுருண்டு மடங்கியது. இதனால் இலங்கை அணி 25 ஓட்டங்களால்...
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டனர். 515 பேர் காயமடைந்தனர்.
வடக்கு மாகாணசபை பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காகத் தெற்கு முன்னெடுத்த சதிக்கு எம்மவர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமாலோ துணை போனதன் மூலம் வடக்கு மாகாணசபையின் அரசியல் அறம் தாழ்ந்து போயுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தாவடி வேதவிநாயகர் விளையாட்டுக்கழகத்தின் வாணிவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.10.2017) நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமவிருந்தினராகக்...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வழங்கப்பட்ட போதிலும், வவுனியாவில் கொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதென வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார். வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையை பொறுத்தவரை, சிறுவர்களுக்கான சட்டங்கள் இருக்கின்றதா...
இந்தியாவின் தேசத் தந்தை’ என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 148ஆவது ஜனன தினம், யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு இந்திய துணைத் தூதுவர் அ.நடராஜன், தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் மதத் தலைவர்கள் மலர் மாலை அணிவித்தனர். அத்தோடு, காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த...
அரச தோட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தேங்காய்களை இன்று முதல் (02) 65 ரூபா சில்லறை விலைக்கு சந்தைப்படுத்த தெங்கு உற்பத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. சிறியளவிலான தெங்கு உற்பத்தியாளர்களினது தேங்காய்களும் இவ்வாறு குறைந்த விலையில் சந்தைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை, நகர்ப் பகுதிகளிலும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள...
எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஒரு சதமும் வேண்டாம்” என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள்...
தமிழர்களின் வாக்கின் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசாங்கம், தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வடக்குக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, அங்கு தமது புதிய கட்சியான பொதுஜன முன்னனியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதன் ஒரு கட்டமாக, யாழில்...
நாட்டில் அரசாங்கம் இழைத்துவரும் துரோகத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைரான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில், இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “நாட்டில் அரசாங்கம் செய்து வருகின்ற துரோகச் செயல்களுக்கு, தமிழ்த் தேசியக்...
காரைநகர் கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகுடன் கடற்படையின் படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், ஒரு மீனவர் உயிரிழந்ததுடன் மற்றொரு மீனவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைநகர் கடற்பரப்பில் நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், காரைநகர் - வெடியரசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் (வயது...
இடம்பெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று காணாமல்போனோர் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை என்றுமே வழங்கப்போவதில்லை. எமது...
இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சிதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
யாழ்ப்பாணத்தில் தற்போது வரையில் முகாமில் வாழும் காணி அற்றவர்களில் 55 பேருக்கு காணிகள் வழங்கி அதற்கான உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். முகாமில் வாழும் மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர்...
அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் ஒருபோதுமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனவும், பௌத்தபிக்குகளும், தென்னிலங்கை இனவாதிகளுமே இதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் அவர்களை நல்வழிப்படுத்தவேண்டிய கடமைதென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு உண்டென நல்லை ஆதீன முதல்வர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த பசில் ராஜபக்ஷ நேற்று நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியாரைச்...
கொக்குவிலில்நேற்று இரவு கடை ஒன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருள்களை அடித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கொக்குவில் சந்தியில் நேற்று (01) இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 9 பேர் கொண்ட குழுவே தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
வித்தியாவின் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், “இன்னும் குற்றவாளிகள் வெளியே உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாணவி...
நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இது ஓர் தனி ஈழமான பிறந்திருக்க வேண்டியதற்காக போராடிய...
Loading posts...
All posts loaded
No more posts
