Ad Widget

காந்தி ஜெயந்தி யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் தேசத் தந்தை’ என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 148ஆவது ஜனன தினம், யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு இந்திய துணைத் தூதுவர் அ.நடராஜன், தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் மதத் தலைவர்கள் மலர் மாலை அணிவித்தனர்.

அத்தோடு, காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த பாடலான ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை, பாடசாலை மாணவர்கள் இதன்போது இசைத்தனர்.

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், காந்தியில் ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் மரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை விசேட பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது. இதில், தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts