Ad Widget

யாழில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!

யாழ். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக நீரை சேகரிக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடமராட்சி களப்புக்கு அருகில் 78 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மழை நீரை சேகரித்து பாதுகாப்பாக பயன்படுத்துவதே அந்த திட்டம் எனவும் பிரதமரின் அலுவலகம் கூறியுள்ளது.

பிரதமர் நியமித்துள்ள வடக்கு மாகாண அபிவிருத்திக்குழு மற்றும் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் என்பன இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்கும்.

இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ள பிரதேசத்திற்கு வருடாந்தம் கிடைக்கும் மழை வீழ்ச்சியில் சுமார் ஆயிரத்து 250 மில்லி லீற்றர் மழை வீணாகி போவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts