பாவப்பட்ட பணம் தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய பணத்தை தவராசா திருப்பிக் கேட்டதால் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு மக்களிடம் இருந்து சேர்த்துக் கொண்டு வந்து தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா திருப்பிக் கேட்டதால்...

அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சர் பதவியை வழங்கியிருக்கலாம் – சிவாஜிலிங்கம்

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 124...
Ad Widget

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதம் 3 ஆயிரம் பேருக்கு மலேரியா இரத்தப் பரிசோதனைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்த 3 ஆயிரம் பேருக்கு மலேரியா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராஜா தெரிவித்துள்ளார். மலேரியாவை முற்றாக தடைசெய்யும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை...

இலங்கையில் முதன் முதலாக புதிய வகை எரிபொருள் அறிமுகம்

இலங்கை எரிபொருள் சந்தையில் புதிய எரிபொருள் வகையான யூரோ 4 (Euro 4) எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக பெற்றோலிய வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த எரிபொருளானது சுப்பர் டிசல் மற்றும் 95 ஒக்ரைன் பெற்றோலுக்கு பதிலாகவே யூரோ 4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் இந்த எரிபொருள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என...

மணல் அகழ்வினைத் தடுக்க ஜனாதிபதிக்கு மகஜர்: வட.மாகாண சபையில் தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர் அனுப்புவதற்கு வட.மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட.மாகாணசபையின் 124வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு சமர்பித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் கருத்துத் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு...

விக்கியையும், சிவாஜியையும் அவமானப்படுத்திய வடக்கு மக்கள்? – தெற்கில் எதிரொலி

“கேர்ணல் ரட்ணபிரியபந்துவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் பிரியாவிடைக் கொடுத்த சம்பவமானது வட முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு கன்னத்தில் அறைந்ததைப் போன்ற செயற்பாடாகும்” என ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். எளிய (வெளிச்சம்) என்ற அமைப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடக...

விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்க முடியாது!! – அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு

விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மூலமாக போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்குதல் தொடர்பான யோசனை ஒன்று...

இராணுவத்தின் இலவச கண்புரை சத்திரசிகிச்சை முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்

இாணுவத்தின் யாழ்.மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனிதாபிதமான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்ட்டுள்ள கண்புரை நோயாளரகளுக்கான இலவச சத்திரசிகிச்சைத் திட்டம் முதியோர்களுக்கு உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதமாகும் என கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவையின் உப தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.ரகுபதி தெரிவித்தார். பலாலி இராணுவ வைத்தியசாலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்களின் பங்களிப்புடன் கண்புரை நோயாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை...

தவராசா கோரிய பணத்துடன் மாகாண சபையில் கிழக்கு மாணவர்கள்!

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் திருப்பித்தருமாறு கோரிய 7 ஆயிரம் ரூபாவை அவரிடம் ஒப்படைப்பதற்காக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாண சபைக்கு வருகைத் தந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய,...

அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி அமைச்சர் பதவி!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாயத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி சபாநாயகர் பதவியை வழங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சேபனை தெரிவித்தது. அதனால் அங்கஜன் இராமநாதனை பிரதி...

கொக்குவில் வாள்வெட்டு: கைதாகியவர்களே பாதிக்கப்பட்டவர்கள்!! : முறைப்பாட்டாளருக்கு அழைப்பாணை!!

“கொக்குவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள். முறைப்பாட்டாளர் மற்றும் அவருடன் இணைந்தவர்களே தாக்குதல் நடத்தியிருந்தனர்” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் மன்றுரைத்தார். “சம்பவத்தை ஊடகங்கள் அவதானித்து செய்தி...

வாக்காளர் பெயர்ப் பதிவு படிவத்தை கையளித்துவிட்டீர்களா?

018ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை (பிசி படிவம்) துரிதமாக முழுமை செய்து, கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை கிராம அலுவலர்கள் தற்போது வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி இப்போது 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக தேர்தல்கள் செயலகம்...

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைகிறது!

இன்று (12) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா கூறுகிறார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவைக்கு தாக்கல் செய்வதாக அமைச்சர் கூறுகிறார். அதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை...

கடற்தொழில் அமைப்புக்களின் பேரணியில் மாவைக்கு எதிர்ப்பு! பேரணியில் கலந்து கொள்ளாது திரும்பி சென்றார்!!

வடமராட்சி கிழக்கில் அத்துமீறித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடற்தொழில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் நேற்று (திங்கட்கிழமை) பேரணி ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள்...

வடக்கு முதல்வருக்கு எதிராக, அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா ???

இராணுவத்தை பிரிக்க நினைக்கும் வடக்கு முதல்வருக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவிலான ஒன்றிணைந்த எதிரணி கேள்வி எழுப்பியுள்ளது. வடக்கு மக்களின் வாக்குகள் தேவை என்பதற்காக, ஆட்சியாளர்கள் விசாரணைகளை நடத்தமாட்டார்கள் என்று, ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தமிழர்களுக்கு வீடு பறிபோனதா? : சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டச் செயலக அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தமிழர்களுக்கான வீடுகள் பறிபோனதா என வட.மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...

நினைவுத்தூபி அமைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்

திருக்கோவில், தம்பிலுவில் பிரதேச சபைக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கு நினைவுத்தூபி அமைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என வட.மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான...

வடக்கு – கிழக்கில் மாவட்ட நீதிபதிகள் 9 பேருக்கு இடமாற்றம்

வடக்கு – கிழக்கில் 9 மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. “நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. இந்த மாற்றம் வரும் 18ஆம் திகதி நடைமுறைக்கு வரும்” என ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், ஊர்காவற்றுறை மாவட்ட...

காரைநகர் வரவேற்பு அலங்கார வளைவு திறந்துவைக்கப்பட்டது

காரைநகர் பிரதான வீதியில் வலந்தலைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள காரைநகர் வரவேற்பு அலங்கார வளைவு இன்று சமய வழிபாடுகளுடன் திறந்துவைக்கப்பட்டது. காரைநகர் வரவேற்பு வளைவு திறப்புவிழா நிகழ்வு காரைநகர் பிரதேச சபையின் ஜக்கியதேசியக்கட்சி உறுப்பினரான சுந்தேரஸ்வரன் கிருஷ்ணவரதன் தலைமையில் இடம்பெற்றது. திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், சிறப்பு...

யாழ். நகரில் கடலட்டைத் தொழிலை தடுக்க வலியுறுத்தி பேரணி!!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய கடலட்டை மீன்பிடித் தொழிலை நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் யாழ்.மாவட்டத்தில் பேரணி ஒன்றை முன்னெடுத்து அரச அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர். வடமராட்சி கிழக்கு மருதன்கேணி பகுதியில்,தென்னிலங்கை மீனவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலக கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக உள்ளூர் மீனவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று...
Loading posts...

All posts loaded

No more posts