யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!

‘வாய்ப்பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசியல் கைதிகளையா?’ எனக் கோஷமெழுப்பி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இப்போராட்டம் நடைபெற்றது. இதன்போது...

ஆர்னோல்டை நினைத்தாலே யூ.எஸ் ஹோட்டல் சதிதான் நினைவுக்கு வருகிறது -காக்கா அண்ணன்

உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும். இந்த இரு...
Ad Widget

கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார் – இராணுவம்

யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் பல ஏக்கர்...

பிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மிகப் உயரிய விருதான செவாலியே விருது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெறுகின்றார். பிரான்சின் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சார்பாக பிரஞ்சு தூதுவர் ஜீன் மரின்...

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஜனாதிபதி மைத்திரி!

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்து சமய நிகழ்வுகள் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். திருகோணமலை மாவட்டத்தில் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் ‘சிரிசர பிவிசும’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதில் பங்கேற்பதற்காக திருகோணமலை சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித்...

30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருக்கலாம் – சம்பந்தன்

30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருந்தால் நாம் முன்னேற்றம் அடைந்திருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், “இந்த பகுதி மக்கள் மிகவும் வறிய மக்கள். அவர்களின் நிலைமை மாற்றியமைக்க...

தமிழர்கள் மீதான படையினரின் பாலியல் சித்திரவதைகள் இலங்கையில் தொடர்கின்றன-ஜெனிவாவில் அறிக்கை

தமிழர்கள் அரச படையினரால் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளுக்கு உள்ளாவது இலங்கையில் தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்றும்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் ஐடிஜேபீ அமைப்பு இந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. A ground-breaking...

சாதாரண தர, உயர்த்தரப் பரீட்சைகளை டிசம்பரில் நடத்த தீர்மானம்!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சை ஆகிய இரண்டையும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பரீட்சை திகதிகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக...

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு...

திடீரென வாகனங்களை மறித்து யாழில் புகைப் பரிசோதனை!!

யாழ்ப்பாணத்தில் இன்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து வாகனங்களுக்குப் புகைப் பரிசோதனையும், தரப் பரிசோதனையும் மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயில் முன்பாக வீதிகளில் பயணித்த வாகனங்கள் மறிக்கப்பட்டுச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புகைப் பரிசோதனையில் தோல்வியடைந்த வாகனங்களும், தரம் குறைந்த வாகனங்களும் அவற்றைச் சீர் செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்டது. சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரம்...

தீர்வின்றி தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) ஏழாவது நாளாக நீடித்து வருகிறது. தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி இவர்கள் கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு...

மன்னார் அகழ்வுப் பணிகள் 75ஆவது நாளாகவும் நீடிப்பு!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்று 75ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன. மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், அகழ்வுப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் மேலதிக பணியாளர்கள் அகழ்வுப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்....

பிரபாகரனை விசஜந்து என கூறிய டக்ளஸ் தேவானந்தா மன்னிப்பு கோர வேண்டும் – செ.கஜேந்திரன்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை விசஜந்து என கூறியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மன்னிப்பு கோர வேண்டும். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், டில்லி சென்றுள்ள டக்ளஸ் தேவானந்தா அங்கு...

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆவா குழு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வின்போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆவா குழு நுழைந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்று மகிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பு பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த கலந்துகொண்டு...

யாழில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டதில் அணி திரளுங்கள்!

அனுராதபுரம் சிறைச்சாலை தமது விடுதலையை கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு ஏற்ப இந்த...

தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகர சபையே நடத்தும்: இம்மானுவேல் ஆர்னோல்ட்

தியாக தீபம் தீலிபனின் நினைவுத்தூபி, யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ளதால் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும் என யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிகையிலையே அவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “செப்டம்பர் 26ம் நாள் 1987ம் ஆண்டு எமக்கெல்லாம்...

அரசியல் கைதிகள் விவகாரம்: அடுத்தகட்ட பேச்சுக்கு வருமாறு சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடனான கடைசி சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான உடன்படிக்கைகள் தொடர்பில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்...

இந்திய அதிகார மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள பலாலி விமான நிலைய விவகாரம்!

இலங்கை அரச உயர் மட்டத்தில் பலாலி விமான நிலையம் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் கருத்துக்கள் இந்திய அதிகார மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இலங்கை விமானப்படையே மேற்கொள்ளும் என்றும், இந்தியாவிடம் கையளிக்கப்படாது என்றும் இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருப்பது, புதுடெல்லி அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள்...

யாழில் காணப்படும் வீதி ஒழுங்கு பிரச்சினைகளே விபத்துக்களுக்கு காரணம்: வருண ஜயசுந்தர

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதற்கு, முறையற்ற வீதி ஒழுங்குகளே காரணமென யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்குப் பிரச்சினைகள் உள்ளதாகவும், அவை உரிய அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். யாழிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை)...

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள குறித்த அலுவலகத்தின் மீது நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர்ப்பலகையை அடித்து நொருக்கி சேதப்படுத்திச் சென்றுள்ளது. சம்பவம்...
Loading posts...

All posts loaded

No more posts