Ad Widget

பிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மிகப் உயரிய விருதான செவாலியே விருது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெறுகின்றார்.

பிரான்சின் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சார்பாக பிரஞ்சு தூதுவர் ஜீன் மரின் சூ வழங்கினார்.

பாரிஸ் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தில் அவர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கிளாஸ் டி மாட்ரிட் உறுப்பினராகவும், உலகளாவிய தலைமைத்துவ அறக்கட்டளையின் உறுப்பினராகவும், தெற்காசிய கொள்கை, ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

Related Posts