Ad Widget

மன்னார் அகழ்வுப் பணிகள் 75ஆவது நாளாகவும் நீடிப்பு!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்று 75ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன.

மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், அகழ்வுப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் மேலதிக பணியாளர்கள் அகழ்வுப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதுவரைக்கும் குறித்த வளாகத்தில் இருந்து 136 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 130 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts