- Saturday
- May 9th, 2026
ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஏனைய சில கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இலங்கையில் வெளியாகும் ஆங்கில நாளிதழொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நான் தான் தீர்மானிக்க வேண்டும். அந்தவகையில்...
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலையை புரிந்துகொண்டு மஹிந்த ராஜபக்ஷ தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான றொபேர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். அத்தோடு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று...
யாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபையின் அமர்வு வெள்ளிக்கிழமை காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார். மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சியில் வைத்து முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன் நிறைவில் மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் ஜனாதிபதி முப்படையினர்...
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம அலுவலகர் ஒருவர் முன்னாள் போராளி மற்றும் பொதுமகன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அசாதரண முறை குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பணியிலிருந்த கிராம அலுவலகர் துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில்...
விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரணை செய்த நீதவான், பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு வழக்கை...
போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்...
கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வகையில் மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சதோச வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 112ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது. இதுவரை வெளியிடப்பட்ட பல...
யாழ். மாவட்ட மக்களின் வறுமையை போக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வட மாகாணசபை தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்வதாக கனடா உயர்ஸ்தானிகரிடம் யாழ். மாநரக முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னே, யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை மாநகரசபையில் வைத்து நேற்றையதினம் (06) சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாலி நகர் மகா வித்தியாலயத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கல்வித் திணைக்கள வட்டாரங்கள்...
அரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியால் நேற்று (வியாழக்கிழமை) சகல திணைக்களங்களின் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள்...
ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றதே ஒழிய வேறு எவ்வித இரகசிய உடன்படிக்கைகளும் அக்கட்சியுடன் மேற்கொள்ளவில்லையென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு அவர்களிடையே செய்துகொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கையே காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய...
அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கிளிநொச்சி இரணைமடு குளத்தினை விவசாயிகளிடம் கைளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இன்றைய விஜயம் அமையவுள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில் மஹிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் (புதன்கிழமை) நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால்...
தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு பொதுத் தேர்தலே சிறந்த தீர்வாக அமையும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்சான் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ள டில்சான், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். ‘நீதிக்கான குரல்’ எனும் அமைப்பின் கீழ்...
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் ஒரு தொகுதியினருக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புனர்வாழ்வு அதிகாரசபையின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கேணல் வஜிர மடுகல்ல தலைமையில் யாழ். அரியாலை சர்வோதய நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 16 குடும்பங்களிற்கு பசு மாடுகளும், 42...
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொலைபேசியூடாகவே இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், மதத்தலைவர் ஒருவரின் முயற்சியின் பயனாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமான எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு...
ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ட்டுவிட்டரில் அதிகளவில் பிரபல்யமடைந்த பதிவொன்றுக்கு பதில் வழங்கும் வகையில், கூட்டமைப்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வருவது மட்டுமே என ஐக்கிய தேசியக்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரச்சிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் வைத்தியசாலை நிர்வாகத்துக்குள் பூதாகரமாகியுள்ளது. அதுதொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
