புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள இந்திய கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவே தெற்கு வங்கக்கடல் தென்மேற்கு வங்கக்கடல் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு 6 ஆம் திகதி...

ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்!

இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சி இரணைமடுகுளத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று(05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா...
Ad Widget

போர்க்காயங்களின் வலியால் கிழக்கில் முன்னாள் போராளி தற்கொலை!

போரினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மட்டக்களப்பு தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த வைரமுத்து திசவீரசிங்கம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தின் முன்னாள்...

யாழில் இறைச்சி கடத்திய இரு இளைஞர்கள் கைது

பசு மாட்டினை திருடி வெட்டி, அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் பசுமாடு ஒன்றினை களவாடி அதனை இறைச்சியாக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது , ஊர்காவற்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த முச்சக்கர...

ஜனாதிபதி சட்டத்தரணியாக தவராசா நியமனம்!

ஜனாதிபதி சட்டத்தரணியாக, இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி. தவராசா நியமிக்கப்பட்டுள்ளார். 38 வருடங்கள் சட்டத்துறையில் அனுபவம் கொண்ட சட்டத்தரணி தவராசா, பல்வேறு மனித உரிமைகள் செயற்பாடுகள், 11 தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டமை மற்றும் அரசியல் கைதிகள் விடுதலைக்கு முக்கிய பங்காற்றியவர்களில் இவரும் ஒருவராவார். இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஜனாதிபதி மைத்திரி சிறைக்கு செல்ல நேரிடும் – பொன்சேகா

நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சட்டம் பொதுவானது என தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறை செல்லக்கூட நேரிடும் என கூறியுள்ளார். நாடாளுமன்ற அமர்வு இடம்பெற முன்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரி அவரது சொந்த சொத்தை பங்கிடுவது போல்தான் அரசாங்கத்தை...

சர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையில் மைத்திரி – கூட்டமைப்பு

சர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஞா.ஸ்ரீநேசன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய...

தொழிலுக்காக பதவி துறந்த வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்

தொழிலுக்கு செல்வதனால் சபை கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிக்க முடியாததனால் ,உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சிவசோதி நவகோடி விலகல் கடிதம் கையளித்துள்ளார். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) சார்பில் போட்டியிட்டு வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக தெரிவான சிவசோதி நவகோடி எனும் உறுப்பினரே இவ்வாறு...

ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஆதரவு: சிவாஜிலிங்கம்

எழுத்து மூல ஒப்பந்தங்கள் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்ணணிக்கு ஆதரவு வழங்கக் கூடாது என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தொிவித்த அவர், “கொழும்பில்...

சிறுவர்களை ஏமாற்றி போராட்டத்துக்கு அழைத்து வந்த பொதுஜன பெரமுன கட்சியினர்!!

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பாடசாலை உபகரணங்கள் தருவதாக கூறி அதிகளவாக சிறுவர்கள் பொதுஜன பெரமுனவினரால் அழைத்துவரப்பட்டனர். யாழ்ப்பாணம் பிரதான பேருந்து தரிப்பு நிலைத்திற்கு முன்பாக இன்று காலை மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியனரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில...

யாழ்.வைத்திய சாலையில் வைத்தியர்களாக நடித்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள்!

வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து , இதய துடிப்பு காட்டியுடன் (டேடஸ் கோப்) இரு பெண்கள்...

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் டாலர்களுக்காக சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. எனினும் இச்சுவரொட்டிகள் யாரால் வெளியிடப்பட்டது அல்லது யாரால் ஒட்டப்பட்டன என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை இதேவேளை பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர்...

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் நிறைவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 8 வரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், கூட்டம் நிறைவடைந்துள்ளதாக கூட்டமைப்பின்...

வவுனியாவில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : வர்த்தகர்கள் தப்பியோட்டம்

வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகே இரவு 8.20 மணி தொடக்கம் 9.30 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. இவர்களின் நடவடிக்கையின் அச்சத்தில் அவ்விடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை வர்த்தகர்கள் மூடிவிட்டு சென்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக 8.30 மணிக்கு தமிழ் மொழி மூல...

வங்காள விரிகுடாவில் தளம்பல் நிலை – மழையுடனான வானிலை தொடரும்!

இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

டிப்பரால் பறிக்கப்பட்ட மண்ணுக்குள் சிக்குண்டு குடும்பத்தலைவர் பரிதாபச் சாவு

மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பத்தலைவர் ஒருவர் மண்ணுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார். மன்னார் சிலாபத்துறைப் பகுதியில் திங்கட்கிழமை(3) இரவு இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது. மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (3) இரவு டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மன்னார்...

என்னை நெருக்கடிக்குள்ளாக்கினால் ஜனாதிபதி பதவியை துறந்து, பொலன்னறுவ பண்ணைக்கு போய்விடுவேன்: மைத்திரி

“என்னை அதிகம் நெருக்கடிக்குள்ளாக்கினால், எனக்கு வேறு வழியில்லை. நாட்டு மக்களிற்கு உரையாற்றிவிட்டு பதவியை துறந்து, பொலன்னறுவ பண்ணைக்கு சென்றுவிடுவேன்“இப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார். அவரது ருவிற்றர் பக்கத்தில் நேற்றிரவு இந்த தகவலை வெளியிட்டார். ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிற்குமிடையில் நேற்று முன்தினம்...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன!

பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் எதிர்வரும் 07 ஆம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 31 பேருக்கும், கணக்காய்வு உத்தியோகத்தர்கள் 02 பேருக்கும், பதவி உயர்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர்கள்...

நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் – கிளிநொச்சியில் போராட்டம்!

நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநாச்சி பொது சந்தைவரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனயீர்ப்பு...

அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்க ஜனாதிபதி உத்தரவு

அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று(திங்கட்கிழமை) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த...
Loading posts...

All posts loaded

No more posts