- Saturday
- May 9th, 2026
வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவன் அறைக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், சாவகச்சேரி சமூர்த்தி பயனாளிகள், சித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள கிராம மட்ட...
வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார். இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த...
“செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் கைத் துப்பாக்கியுடன் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய பொலிஸாரை இராணுவத்தினரிடம் பிடித்துக் கொடுத்த உள்ளூர் இளைஞர்கள் மீதே பொலிஸார் கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டை சுமத்திக் கைது செய்தனர். அந்த இளைஞர்கள் தொடர்பில் நடந்த சம்பவத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கியிருந்தேன். அத்துடன், அந்த இளைஞர்களை விடுவிக்கவும் கோரியிருந்தேன்” இவ்வாறு தமிழ்...
இந்தியாவின் காஞ்சிபுரத்திலே ஏழாவது முறையாக இடம்பெற்ற ஹிடின் ஐடோல் (Hidden Idol ) சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கிராமிய நடன பிரிவில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் முதலாமிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தனர். கடந்த வாரம் நடைபெற்ற இந்த கிராமிய நடனப்போட்டியில் பங்கேற்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் 8...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படத்தை பிரசுரித்து ‘ இரவு இரண்டு மணிக்கு...
வவுனியா புதுர்ப் பகுதியில் கைப்பற்றிய கைத் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுர்ப் பகுதியில. சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபர், பொலிசாரைக் கண்டவுடன் கையில் இருந்து பை ஒன்றினை தூக்கி எறிந்து விட்டுத் தப்பியோடினார். பையில் இருந்து ஓர் கைத்துப்பாக்கி , 4...
மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள ஆளுநர் நியமனமானது இனவாதத்தினை வளர்க்கும் என வட.மாகாண அவைத் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இனக்குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய...
நாட்டுக்கு பிரயோசனமற்ற அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிக்கும் சுமந்திரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பினை...
அடுத்த தேர்தலில் மைத்திரி – மஹிந்த கூட்டணியமைப்பது சாத்தியமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திரக் கட்சி எப்போதும் கூட்டணியாகத் தான் களமிறங்கியுள்ளது. சுதந்திரக் கட்சி என்பது பிரதானக் கட்சியாகும்....
வவுனியாவில் பாடசாலை மாணவியை பாலியல் ரீதியான சேஷ்டை மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (04.01) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் கடந்த மாதம் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் பாடசாலை...
ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடன், ஜனாதிபதி ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலை மைத்திரிபால சிறிசேன எதிர்வரும்...
வவுனியா, செட்டிகுளம், இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாகவும் அதனை உடன் விடுவிக்க கோரியும் பாரியளவிலான ஆர்ப்பாட்மொன்று இடம்பெற்றது. வவுனியா, செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம் பள்ளிவாசல் முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மதவாச்சி மன்னார் வீதியில் ஆண்டியாபுளியங்குளத்தில் மதிய நேர தொழுகையின் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஒன்றுகூடிய இஸ்லாமிய மக்கள் தமது...
எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகம் இல்லாவிட்டாலும், அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடிகளைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களுக்காக முன்னெடுக்கும் பணிகள் தொடருமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல – நெலும் மாவத்தையிலுள்ள தனது அலுவலகத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) புத்தாண்டுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த வருடம்,...
உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்தில் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. “உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜை சந்தித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. இவர் எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்....
தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஒரு நாளும் இருக்கவில்லை. 30 வருடகால வரலாறு உள்ளது. அது சிலருக்குத் தெரியாது இருக்கலாம். தமிழரசுக் கட்சியில் உள்ள அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை. எதிரானவர்களும் உள்ளனர். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் துணை பொதுச் செயலரும் வடக்கு மாகான அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். நல்லூரில் அமைந்துள்ள...
தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய மாஷல் பெரேரா, வட மாகாணத்திற்கும், அசாத் சாலி கிழக்கு மாகாணத்திற்கும் நியமனம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நியமனம் பெறவுள்ள மாஷல் பெரேரா, டிலான் பெரேராவின் தந்தையென்பதுவும் குறிப்பிடதக்கது. இதேவேளை, கடந்த டிசம்பர் 31ஆம் நாளுடன் சகல ஆளு நர்களையும் ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்படுவார் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொதுமக்களின் ஆணைக்கு அமைய தெரிவுசெய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையிலான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 14 மாதக் காப்பகுதிக்குள் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமரைச் சந்தித்து சமஸ்டியையோ, அரசியலமைப்புக்கு முரணான வகையில் இலங்கையை இரண்டாக மூன்றாக பிரிப்பதையோ ஒருபோதும் கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேரடி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பில் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும்போதே அவர் இதனைத்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகள் இன்று (04.01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாகத்திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றது. ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய எம்மால் எழுத்து மூலம்...
Loading posts...
All posts loaded
No more posts



