இறக்குமதி செய்யும் பால்மாவில் பன்றி எண்ணெய் கலந்துள்ளதா? – பாராளுமன்றத்தில் விவாதம்!

இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றி எண்ணெய், மரக்கறி எண்ணெய் கலந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதா கவும் இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாக ஆய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில் வாணிப பிரதி அமைச்சர் புத்திக பதிரண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பால்மா மாதிரிகளை தனியார் நிறுவனமொன்றுக்கு...

திருடப்போன இடத்தில் குடித்துவிட்டு மக்களிடம் மாட்டிய திருடா்கள்!!

வரணி பகுதியில் வீடு புகுந்து கொள்ளையிட முயற்சித்தவா்கள், வீட்டிலிருந்த வெளிநாட்டு மதுபானத்தை மூக்கு முட்ட குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா். நாவற்குழியை சோ்ந்த கொள்ளையா்கள் வரணி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், கொள்ளையிட முயற்சித்திருக்கின்றனா். இதனையடுத்து அயல் வீட்டவா் என்ன என பாா்ப்பதற்கு...
Ad Widget

பல்கலை. மாணவர்கள் படுகொலை: சுருக்கமுறையற்ற விசாரணைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையிலநேற்று ஆரம்பமாகின. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்...

தமிழரின் ஒற்றுமையை சீர்குலைக்கவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழரின் ஒற்றுமையை தான் சீர்குலைக்கவில்லையென்றும், மாறாக மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் அறியாமையை சீர்குலைக்க முயற்சிக்கின்றேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, அவலத்திற்கும், அஸ்தமனத்திற்குமே ஒற்றுமை வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாராந்தம் ஒரு கேள்விக்கு பதிலளித்து வருகின்றார். அதன்படி இந்த வாரம் தமிழர் ஒற்றுமையை...

அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வியடைய கூட்டமைப்பே காரணம் என்கின்றார் மஹிந்தர்!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தோல்வி அடைந்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கொழும்பில் தமிழ் செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிவகையில், “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று,...

ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது – அவ்வாறு எதுவுமே யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெறவில்லை – பணிப்பாளர் மறுப்பு

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவும் இல்லை . விசாரணைகளும் நடைபெறவில்லை”இவ்வாறு யாழ்.போதான வைத்தியசாலை பணிப்பாளர்கள் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது: யாழ்.போதனா வைத்தியசாலையில் 500...

யாழில் பெற்றோல் ஊற்றி வீடு எரிப்பு

யாழில் இனந்தெரியாத நபர்களினால், வீட்டின் மீது பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டதில், வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டினுள் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர். அத்தோடு, வீட்டிலிருந்த உடமைகளை உடைத்து சேதமாக்கியதுடன்,...

யாழ் மாவட்ட செயலகத்தில் கொட்டும் மழையில் மாணவர்களை நடனமாட வைத்து சுதந்திர தின கொண்டாட்டம்!!

முப்படைகள் , பொலிஸ் அணிவகுப்புடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழைக்குள்ளும் சுதந்திர தின கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக காலை 8.45 மணியளவில் மாவட்ட செயலர் தேசிய கொடியை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து இராணுவம் , கடற்படை, விமான படையினரின் அணி வகுப்புடன், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு...

யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளனர். மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்...

யாழில் மோட்டார் சைக்கிளை திருட முயச்சித்த ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வர்த்தக நிலையம் முன்பாக நிறுத்தி விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் செல்ல முயற்சித்தவரை வர்த்தகர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் நகைத் தொழில் புரியும் இளைஞன், மோட்டார் சைக்கிளை வீதியோரம் நிறுத்தி விட்டு கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார் . இதன் போது வீதியால்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு!

உயிரோடு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? எனக் கேட்டுப் போராடும் உறவுகளுக்கு ஆதரவாக “மறைக்கப்படும் நீதியை வெளிப்படுத்தக் கோரி” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் எதிர்வரும் (09) சனிக்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் காலை 10 மணி முதல் 11...

75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படலாம்

நாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும். ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய,...

சிங்கள காலனித்துவ ஆட்சி தமிழ் தேசம் மீது செலுத்தப்பட்ட நினைவு நாள் – கஜேந்திரகுமார்

பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதை சிங்கள இனத்தவர்கள் கொண்டாடும் வேளையில், சிங்கள காலனித்துவ ஆட்சி தமிழ் தேசம் மீது செலுத்தப்பட்ட நினைவு நாளை தமிழர்கள் அனுஷ்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...

வவுனியா சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகள் விடுதலை

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 71 ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 518 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சிறு சிறு குற்றங்களுக்காகவும், தண்டப்பணம் செலுத்த முடியாததாலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களோடு 10 வருடகால சிறைத்தண்டனையை அனுபவித்த 70 வயதுக்கு மேற்பட்டவர்களுமே இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால...

வடமாகாணசபையின் பின்னடைவிற்கான காரணம் குறித்து சுமந்திரன் ஒப்புதல் வாக்குமூலம்!

வடக்கு மாகாணசபையின் பின்னடைவிற்கான காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். – சாவக்கச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றது. இதன் பின்னர் அமர்வுகளும் ஆரம்பமானது. இதன் பின்னர்...

வடக்கிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்யுமாறு பணிப்புரை!

வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான...

யாழ். போதனா மருத்­து­வ­ம­னைக்கு பெருன்பாமை இனத்தவர் சிற்­றூ­ழி­யர்­களாக நியமனம்!!

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் எதிர்­வ­ரும் 15ஆம் திகதி திறந்து வைக்­கப்­ப­ட­வுள்ள அவ­சர விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வுக்கு நிய­மிக்­கப்­ப­டும் சிற்­றூ­ழி­யர்­க­ளில் 60 சத­வீ­த­மா­னோர் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அவ­சர விபத்­துப் பிரிவு அமைக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வ­ரும் 7ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலை­யில், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணம் வரு­கை­த­ரும்­போது அத­னைத் திறப்­ப­தற்கு...

முல்லைத்தீவு போராட்ட களத்திற்கு வந்த சர்வதேச பல்கலைக்கழக மாணவர்கள்!

நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதந்த இனத்துவக் கற்களுக்கான சர்வதேச நிலையத்தினைச் சேர்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேர் கேப்பாபிலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலவரங்களை கேட்டறிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்ற...

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் சாவு!

சாவகச்சேரியில் தொடருந்துடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டநிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், தொடருந்துடன் மோதி படுகாயமடைந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்துடனேயே மோட்டார் சைக்கிள் மோதுண்ட இந்தச் சம்பவம் நேற்று...

சட்டத்தரணி மணிவண்ணனுக்கு எதிராக சீடி ஒன்றை சமர்ப்பிகக பொலிஸார் முயற்சி!!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கில் புதிய சான்றுப்பொருளாக இறுவெட்டு (சீடி) ஒன்றை இணைக்க பொலிஸார் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் நிராகரித்தார். “வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட பின்னர்...
Loading posts...

All posts loaded

No more posts