வவுனியா சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகள் விடுதலை

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 71 ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 518 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு சிறு குற்றங்களுக்காகவும், தண்டப்பணம் செலுத்த முடியாததாலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களோடு 10 வருடகால சிறைத்தண்டனையை அனுபவித்த 70 வயதுக்கு மேற்பட்டவர்களுமே இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனடிப்படையில், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்றனர்.

Related Posts