ATM அட்டை மோசடி: புதிய பாதுகாப்பு நடவடிக்கை!

ஏ.ரி.எம் (ATM) அட்டைகளுக்கூடாக இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கி புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளது. இதேவேளை ஏ.ரி.எம் வலையமைப்புக்கூடாக பணப்பரிமாற்றம் செய்யும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது. பண அட்டையை பயன்படுத்தி ஏ.ரி.எம்...

யாழ்.பல்கலைக்கழக் முதலாம் வருட மாணவர்கள் பகிஸ்கரிப்பில்!

யாழ்.பல்கலைக்கழக் முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக 4 ஆம் மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரியும்...
Ad Widget

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பெறுவதற்கான இலவச பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மானிப்பாய் போன்ற பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான கல்வித் தகைமை ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் கணிதம் சீ உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தி அல்லது கணிதம் எஸ்,...

கிளிநொச்சி மாணவன் விவகாரத்தில் வழக்கை திசைதிருப்பினர் பொலிசார்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கஞ்சாகடத்தல்காரர்கள் பற்றிய தகவல் வழங்கியதற்காக பாடசாலை மாணவன் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை பொலிசார் திசைதிருப்பியது அம்பலமாகியுள்ளது. வன்னிப் பிராந்திய பொலிஸ்மா அதிபர் நேற்று முன்தினம் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் போது, கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாய மாணவன் ஒருவர், தமது வீட்டு சூழலில்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக குறித்த மாணவன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஊடகவியலாளரும் பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி அவர் மீது சரமாரியாகத்...

கனடா உறங்காவிழிகள் உதவி நிறுவனத்தால் பான்ட் வாத்தியங்கள் அன்பளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் கல்வி வலயத்திலுள்ள உயிலங்குளம் அ.த.க. பாடசாலைக்கு பான்ட் வாத்தியங்களும்,அலுமாரி,மாணவர்களுக்கான டினபோம் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்பட்டன. வன்னியிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஒன்றாகிய உயிலங்குளம் .அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் குடும்பபொருளாதரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கனடா உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதி உதவி...

தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் என்ன?- மஹிந்தவிடம் விளக்கம் கோரும் சி.வி.கே.

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் என, வட. மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். தமது ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குழப்பியது என மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில்...

ஒழுக்க விழு­மி­யங்­க­ளைக் கடைப்­பி­டிக்காவிட்டால் விளக்­க­ம­றி­ய­ல் – யாழ். நீதிவான் அதிரடி

நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கும் சந்தேகநபர்கள் ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்க தவறினால், விளக்கமறியலில் வைக்கப்படுவரென யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம்-நல்லூர், முடமாவடியில் வீடுகளை அடித்து உடைத்தமை, வாள்வெட்டில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு யாழ். நீதிமன்றில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றில் முன்னிலையாகிய சந்தேகநபர்கள் நேர்த்தியாக ஆடையணியாது, ஒழுக்கமற்று...

20,000 பட்டதாரிகளுக்கு இந்த ஆண்டில் அரச வேலை!

2019ஆம் ஆண்டில் 20 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் முன்மொழிவு வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரைவு வரும் மார்ச் 5ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சபையில் முன்வைத்து...

வவுனியாவை சிங்களமயமாக்க அனுமதியளித்தது யார்?- சத்தியலிங்கம் கேள்வி

வவுனியாவை சிங்களமயமாக்க அனுமதியளித்தது யாரென வட. மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். கச்சல் சமனங்குளம் பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் காணப்படும் இடத்தில், புத்த சின்னங்கள் வைக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபருக்கு, வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கடிதமொன்றை அனுப்பி...

இலங்கைக்கான நோர்வே தூதுவர் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டெசெதர் (Thorbjørn Gaustadsæther), வட.மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நோர்வே தூதுவரின் வடக்கிற்கான விஜயத்தின்போது இன்று (வியாழக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. யாழிலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக...

நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்ற மூல காரணம் சப்றா நிறுவனமே! : டக்ளஸ்

தென்னிலங்கையில் சக்விதி முதற்கொண்டு இன்றைய ஈ. ரி, ஐ. (ETI) வரையிலான நிதி நிறுவனங்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றி, மக்களது பணத்தினை கொள்ளையிட்டிருக்கின்றனவோ, அதே போன்று யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் எமது மக்களின் பணத்தை பெருவாரியாக கொள்ளையிட்ட சப்றா நிறுவனம் குறித்தும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...

அரசியல் தலைவர்களுக்கு இந்து சமயப் பேரவை அழைப்பு!

நாட்டில் மற்றைய மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்துக்கள் அரசியல் அநாதைகள் என்ற நிலை காணப்படுகிறது. அதனை மாற்றியமைத்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்து மக்கள் குறை கேள் அரங்கம் ஒன்றை நடாத்துவதற்கு சகல தரப்பினருக்கும் யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை அழைத்துவிடுத்துள்ளது. இந்த அரங்கம் வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம்...

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு ஆளுநர் அறிவுரை

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணையினை நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர், சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் சுரேனை, வடக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர்...

இரண்டு மாதங்களில் மரண தண்டனை உறுதி – ஜனாதிபதி

எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை விதிப்பது உறுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார். அவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் வணிகர்களுக்கு இரண்டு மாதங்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்தோடு மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகளில்...

2 வருடங்கள் உறவுகளுக்காக காத்திருப்பு – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மனித உரிமை...

மீண்டும் குள்ள மனிதன் நடமாட்டம்!!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நள்ளிரவில் குள்ள மனிதன் நடமாட்டம் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதனால் மீண்டும் குள்ள மனிதனின் அச்சம் ஏற்பட்டுள்ளது. சோளன் பயிரிடப்பட்ட வயலுக்குக் காவலுக்குச் சென்ற விவசாயி, குள்ள மனிதன் நடமாடிக் கொண்டிருந்ததை அவதானித்தார். சுமார் 2 அடி உயரமான குள்ள மனிதனைக் கண்டவுடன் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். குறித்த விவசாயி...

57 ஆயிரம் பட்டதாரிகளையும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கவேண்டும் – மகிந்த

வேலையற்ற பட்டதாரிகள் 56 ஆயிரம் பேரையும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றில் கேள்வி ஒன்றின் ஊடாக கோரிக்கை முன்வைத்துள்ளார். தனது பதவிக்காலமான 2012ஆம் ஆண்டு 48 ஆயிரம் பட்டதாரிகளை எந்தவொரு வேறுபடுத்தலுமின்றி அரச சேவைக்குள் இணைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய திகதியிலான (6)...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் இலஞ்சம்!- ஐ.நா குற்றச்சாட்டு

நுண்கடன்களை பெற்றுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் கடன் சேகரிப்பவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ஜுவான் ப்பலோ போல்ஸ் விகி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், 40 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்...

வட.மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு

வடக்கு மாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநரிடம் இன்று (புதன்கிழமை) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை...
Loading posts...

All posts loaded

No more posts