பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். நாளை (வியாழக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பிரதமர் ரணில், மூன்று நாட்களுக்கு வடக்கு மாகாணத்தில் தங்கியிருக்கவுள்ளார். இதன்போது, வலிகாமம் பிரதேச செயலகத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தை பிரதமர் ரணில்...

க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 2 லட்சம் பேருக்கு டெப்!

க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 2 லட்சம் பேருக்கு டெப் கணினி வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை இன்று அனுமதியளித்தது. மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்கப்பட்டு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் சென்றால், அது அரசு மீது பூமாரங்காக திருப்பியடிக்கும் எனச் சுட்டிக்காட்டி அந்த திட்டத்துக்கு ஜனாதிபதி கடந்த ஜூலை 27ஆம் திகதி தடைவிதித்தார்....
Ad Widget

தெல்லிப்பளையில் பெண்ணை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது!

தெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றினுள் கடந்த சனிக்கிழமை வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்திமுனையில்...

கூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன்?- பரபரப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக...

இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது – கோட்டாபய ராஜபக்

இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் பதவியிலிருந்த காலத்தில் புலனாய்வுப் பரிவினர் பயன்படுத்திய வாகனங்கள் வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவற்றை வெள்ளை வான் என கூறமுடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளைவான் கலாசாரத்தை கோட்டாவே அறிமுகப்படுத்தினார் என்ற...

விக்னேஸ்வரன் எதிர்பார்க்கும் நிலைக்கு கீழிறங்க தமிழ் தேசிய முன்னணி தயாரில்லை!

“முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ அதன் தலைவரோ தயாராக இல்லை. தேர்தல் கூட்டணி அமைப்பதற்காகவோ அல்லது எவருடைய எதிர்பார்ப்புக்காகவோ நாம் எமது கொள்கையிலிருந்து இறங்கமாட்டோம்”இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அதன் பேச்சாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். “எனது அரசியல்...

பொலிசார் மீது விசாரணை நடத்தக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நான்கு மாத கற்பிணித்தாய் முறைப்பாடு!

வவுனியா பொலிசார் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நான்கு மாத கற்பிணித்தாயார் ஒருவர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றிய 27வயதுடைய ஊழியர் ஒருவர் அவ்வியாபார நிலையத்தின் உரிமையாளரின் 19 வயதுடைய மகளை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்...

பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு எந்த தலைவர்களிடமும் இல்லை!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடம் இல்லை என் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் நேற்று முன்தினம் (10) பிற்பகல் தமிழர் விடுதலை கூட்டணியின் மாவட்ட செயல் குழு தெரிவு கூட்டம் இடம் பெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு...

யாழில் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுத்தாக்குதல்!

யாழ்ப்பாணம், அரியாலை – நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மீதே குறித்த தாக்குதல் நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலொன்றே இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல்தாரிகள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் பெட்ரோல்...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின்...

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் நிறைவு!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்பக் கட்ட வேலையுடன் குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிகள்...

பிரித்தானியா தலைமையில் ஜெனீவாவில் பிரேரணை!- இலங்கைக்கு நெருக்கடி

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த கோரும் வகையில், ஜெனீவாவில் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவின் தலைமையில இப்பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.விற்கான பிரித்தானிய தூதரகம் நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அமெரிக்காவின் இணை...

ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் தமிழினத்துரோகத்தின் நீட்சியாகவே வரலாற்று குறிப்பேடு வெளியீடு! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே பின்னாட்களில் பாதை மாறி கொள்கை பிறழ்ந்து தமிழ் மக்களின் விடுதலைக்கு விரோதமாக செயற்பட்டார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்புக்கு வலுவான பங்கிருப்பதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் முக்கிய காரணகர்த்தாவாகத் திகழ்ந்துள்ளமை வரலாறு கூறி நிற்கும் உண்மையாகும். தமிழர்கள் தமிழ்த் தேசிய சக்திகளாக அரசியல் ரீதியில் ஐக்கியப்பட்டு பலம்பெற வேண்டிய...

நல்லூர் பிரதேச சபையின் செயற்பாடுகளைக் கண்டித்து திருநெல்வேலி மரக்கறி வியாபாரிகள் பகிஸ்கரிப்பு

நல்லூர் பிரதேச சபையின் செயற்பாடுகளைக் கண்டித்து திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் இன்று சனிக்கிழமை காலை முதல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலிச் சந்தையில் நடைபாதைக் கடைகளை அகற்றுவதற்கு பிரதேச சபை எடுத்த நடவடிக்கைக்கு அமைய சபையின் ஏற்பாட்டில் பொலிஸாரின் உதவியுடன் நேற்று வெள்ளிக்கிழமை நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டன. ஆயினும் தமது கடைகளை அகற்றப்படுவது...

வட மாகாணத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பு

வட மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறுவருக்கெதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள்...

புலிகளின் தாக்குதலில் அங்கவீனமான பொலிஸார் – அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்

புலிகளுக்கு எதிரான யுத்தத்தினால் அங்கவீனமடைந்த பொலிஸாருக்கான பதவியுயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் எழுப்பிய ,யுத்தத்தினால் அங்கவீனமடைந்த பொலிஸாருக்கான பதவி உயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்பு என்பன வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான...

நிதி மோசடி செய்த கிருஸ்தவ மத போதகருக்கு விளக்கமறியல்!

கனடா நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து, நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிருஸ்தவ மத போதகரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவித்த...

கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது – சுமந்திரன்

புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பை...

அம்பலமானது யாழ் மாநகர சபையின் ஊழல்? 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபாயிற்கு நடந்தது என்ன?

நல்லூர் உற்சவகாலத்தின் போது யாழ் மாநகர சபையினால் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராக்களுக்கான ஒப்பந்தத்திற்கு அதிக நிதி செலவாக காட்டப்பட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சபை அமர்வின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கேள்வி தொடுத்தது. இதன் மூலம் குறித்த மோசடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கடந்த 2018...

தமிழ் மாற்றுத் திறனாளி பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!!

பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது காவல்துறை உத்தியோகத்தரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில்...
Loading posts...

All posts loaded

No more posts