ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளரது. யாழில் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி, முற்றவெளி வரை செல்லவுள்ளது. அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று...

பதுளையில் நிலநடுக்கம்!

பதுளை ஹாலில வெலிமட மற்றும் பசறை பிரதேசங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) காலை இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் இதன் காரணமாக மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Ad Widget

யாழில் போலி விமானச்சீட்டு விநியோகித்து பல இலட்சம் மோசடி!!

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு பயண முகவர் நிறுவன முகாமையாளர் தலைமறைவாகி விட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) முறையிடப்பட்டது. யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35...

தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்று மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநயக்க கூறியுள்ளார். வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஒரே நிபந்தனை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே என அனைவரும்...

காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்வோருக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடி முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து...

பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் சேவைகள் அதிகார சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாயாலும் 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை உப குழுவால் முன்வைப்பட்டு அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளுக்கான விலைச் சூத்திரத்தின்...

அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது -சுமந்திரன்

அரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய அவசியம் தற்போதைய நிலையில் எமக்கு உண்டு. இல்லாவிட்டால் கடந்த ஒக்டோபரில் நடந்தது...

என்னிடம் வரும் அரசியல் வாதிகள் உறவினர்களின் தேவைகள் பற்றிபேசவே வருகின்றார்கள் – ஆளு­நர்

என்­னி­டம் வரும் அர­சி­யல்­வா­தி­கள் கட்சி சார்ந்த தேவை­கள், உற­வு­கள் சார்ந்த வேலை­க­ளைப் பேசவே என்­னி­டம் வருகின்­றார்­கள். மாறாக வடக்கில் பாாிய பிரச்சினையாக மாறியுள்ள குடிநீா் பிரச்சினைக்கு தீா்வினை காண் பதற்கு வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவரும் ஒரு திட்டத்தை கூட முன்வைக்கவில்லை. இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன் தெரி­வித்­துள்­ளார். கொழும்பு ஊட­கம்...

யாழில் கோடாரி வெட்டுக்கு இலக்காகி ஒருவர் காயம்

கோடாரி வெட்டுக்கு இலக்காகிய நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மந்துவில் கிழக்கைச் சேர்ந்த ந.கோபாலன் (வயது 60) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறு கைகலப்பாக மாறியதில், குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார். குடும்பஸ்தரை தாக்கிய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், சாவகச்சேரி...

வடக்கிற்கு புதிய பல்கலைக்கழகம்!- ஓரிரு வாரங்களில் வர்த்தமானி அறிவிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதன்படி இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

ஒன்றரை வயதுக் குழந்தையுடன் இளம் தாயார் தற்கொலை முயற்சி!!

பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் என்று தெரிவித்து ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தனது குழந்தையையும் அழைத்துச் சென்று அடர்ந்த பற்றைக்குள் இவ்வாறு தனக்குத் தானே தீவைத்தார். எனினும் அவர் குழந்தையுடன் அவர் பற்றைப் பகுதிக்குள் ஓடிச்...

தொழில் நாடுவோரை பதிவு செய்யுமாறு கோரிக்கை!

யாழ்.பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழில் நாடுவோர் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரையில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவட்ட செயலக தொழில்...

“நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் சர்வதேசத்தை எட்டவேண்டும் – மாவை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை முன்னெடுக்கப்படும் “நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளடங்களாக சர்வதேசத்தை எட்ட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதற்காக அரசியல் கடந்து அனைவரும் ஆதரவளிக்கும் முகமாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என...

கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது. இந்த அறப்போர் வெற்றிபெற அனைவரும் எமது வீட்டுப்பிரச்சினை என்ற வகையில் ஆதரவு வழங்குவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் நேற்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கையில், “ஈழ வரலாறு சோகத்தோடுதான் தொடர்கின்றது....

ஆளுநரிடம் மகஜர் கையளித்திருப்பது பாரதூரமானது – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

பெருபான்மை அரசால் நியமிக்கப்பட்டுள்ள வடக்கு ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன் பாரதூரமான விடயம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 754 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பை மேற்கொண்டனர். அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கபட்ட...

வடக்கின் அபிவிருத்தி வாக்குகள் தேவைப்படும்போதே நினைவுக்கு வருகிறது: நாமல்

வடக்கு மக்களின் வாக்குகள் தேவைப்படும்போதே அப்பகுதிகளின் அபிவிருத்தி குறித்து அரசாங்கத்துக்கு நினைவுக்கு வருகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் தேவைப்படும்போதே அரசாங்கம் வடக்கின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்றது எனவும்...

உறவுகளைத் தேடும் பெண்கள் அரச அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்தோடு இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையினை அமெரிக்க இராஜாங்கச்...

எங்களிடமிருந்து எதற்காக வாக்கு பெற்றீர்களோ? அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகாதீர்கள்!!!

தமது பிள்ளைகளுக்காக காத்திருந்து உயிரிழந்த ஆத்மாங்களுக்கு துரோகம் இழைக்காமல், அவர்களுக்காக பேசுங்கள். இல்லையேல் துரோகியாகிவிடுவீர்கள் என, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனீவாவிற்கு செல்லவுள்ள வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்த பின்னர், யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டனர். அங்கு தொடர்ந்து தெரிவித்த உறவுகள், ”எமது பிரச்சினைகளுக்கு...

மயிலிட்டி வைத்தியசாலை சேவைக்கு அரச அதிகாரிகள் தடை!- வைத்திய அதிகாரி யமுனானந்தா

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை புனரமைத்து சேவையினை ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகள் தடையாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட காசநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர். யமுனானந்தா இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த வருடம் இராணுவத்தினரின்...

தமிழரின் நீதிக்குரல் ஐ.நா. வரை ஒலிக்க அணிதிரளுங்கள்!- சி.வி. வலியுறுத்தல்

எமது மக்களின் நீதிக்கான குரலை ஐ.நா. வரை ஒலிக்க செய்வதற்கு அணிதிரளுமாறு வட. மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பாகநேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்வரும்...
Loading posts...

All posts loaded

No more posts