Ad Widget

வடக்கின் அபிவிருத்தி வாக்குகள் தேவைப்படும்போதே நினைவுக்கு வருகிறது: நாமல்

வடக்கு மக்களின் வாக்குகள் தேவைப்படும்போதே அப்பகுதிகளின் அபிவிருத்தி குறித்து அரசாங்கத்துக்கு நினைவுக்கு வருகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் தேவைப்படும்போதே அரசாங்கம் வடக்கின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்றது எனவும் நாமல் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கு பல செயற்றிட்டங்களை முன்னெடுப்பதாக தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது. ஆனால் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் வறுமையிலேயே உள்ளனரெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இளைஞர் யுவதிகளுக்காக 10,000க்கும் மேற்பட்ட தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி தருவதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டது. இருப்பினும் தற்போது 60,000 ஆயிரம் தொழிலற்ற பட்டதாரிகள் நாட்டில் உள்ளனர் எனவும் நாமல் கூறினார்.

இவ்வாறு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவர்களை ஏமாற்றும் செயற்பாட்டையே அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றதெனவும் நாமல் கவலை வெளியிட்டார்.

Related Posts