- Thursday
- May 7th, 2026
யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசலில் இன்று (புதன்கிழமை) விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கை யாழ்ப்பாணம் நாவாந்துறை பெரியபள்ளியில் இடம்பெற்றது. இதன்போது, சந்தேகத்துக்கு இடமான பொருட்களோ அல்லது சந்தேகநபர்கள் கைதோ இடம்பெறவில்லை. இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பின் மத்தியில் இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள்...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்ததின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்கில் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது. “இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது” என்று நீதிவான் ஏ.எஸ்.பி போல் கட்டளையிட்டார்....
அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த ஏழ்வரும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் உயிர்த்த்...
மாத்தளையில் பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் அந்தப் பகுதி முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வரகாமுர பிரதேசத்திலுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்தோடு அவர்களின் கைது அரசியல் பிரச்சினையென்றும் அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்தே தீர்க்க முடியுமென்றும் அந்த மையத்தின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் தற்போது நாடு இயல்பு நிலைக்கு மீண்டுவரும் அதேவேளை, பாதுகாப்பு படையினரின் வெற்றிகரமான நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்குள் பயங்கரவாத சவாலினை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு நேற்று (07) முற்பகல்...
நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகம் செய்து , அவர்களிடமிருந்த விலைமதிப்பு மிக்க தொலைபேசிகளை சோதனையிட வேண்டும் என கூறி...
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. அதனை அறிந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்தவற்றை அகற்றியிருக்க முடியாதா? பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் இடம்பெறாது என உறுதிப்படுத்துங்கள்” இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கினார் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்...
இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கின்றாா். அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் பிரதேசத்தில் வடை விற்பனை செய்து வந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். தாக்கப்பட்டு ஆபத்தான...
யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பட்ட மிரட்டல் கடித விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்- சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்த பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்போது அக்கடித்தில் காணப்பட்ட ஒளிப்படத்திலுள்ள இளைஞனை பொலிஸார் கைது...
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் தியாகி தீலிபன் ஆகியோரது புகைப்படங்கள் காணப்பட்டமை தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர் இருவரையும் சிற்றுண்டிச்சாலை நடத்துநரையும் விடுதலை செய்வது தொடர்பாக சாதகமான பதிலை விரைவில் அறிவிப்பதாகப் பதில் சட்ட மாஅதிபர் டப்புள டி லிவேரா உறுதியளித்தார். மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை...
தெல்லிப்பளை பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மூதாட்டியின் வீட்டுக்கு நேற்று (திங்கட்கிழமை) காலை அவர்களது உறவினர்கள் சென்றபோது, அவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்....
குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகிறார்கள். ஆனால் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி மூன்று இடங்களில் நேற்று திங்கட்கிழமை ஆயுதமுனையில் வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை-புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி பகுதியில் மூன்று வீடுகளில் 27 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பன ஆயுத முனையில்...
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த மௌலவி நீராவிப்பிட்டி பகுதியில் தங்கி இருப்பதாக சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ளார்கள். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இவர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் ஒரு வருடத்திற்கு அரசாங்க வாகனத்தை பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்....
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 54 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு 19 சந்தேகநபர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர்...
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கி நேர்காணலிலேயே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தாக்குதலை தடுக்க முடியாமல் போனமையையிட்டு மிகவும் கவலையடைகின்றேன். ஆனாலும் குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தற்போது எடுத்து...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 30ம் திகதியிடப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி இடைநிறுத்தம் வழங்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி...
உணவகத்திற்குள்ளிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜன்குளம் தாவூத் ஹோட்டல் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு கனகராஜன்குளம்...
இலங்கையில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர் ண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம் இறந்து விட்டதாக முதலில் தகவல் வெளியானது. இருப்பினும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் என்பதால் அவர் தற்கொலைதாரியாக மாறியிருந்தால் அந்த அமைப்பை தொடர்ந்தும் வழிநடத்துவது...
Loading posts...
All posts loaded
No more posts
