Ad Widget

சஹ்ரான் மன்னார் ஊடாக தமிழ்நாடு சென்றிருக்கலாம்! – இராணுவத் தளபதி

இலங்கையில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர் ண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம் இறந்து விட்டதாக முதலில் தகவல் வெளியானது.

இருப்பினும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் என்பதால் அவர் தற்கொலைதாரியாக மாறியிருந்தால் அந்த அமைப்பை தொடர்ந்தும் வழிநடத்துவது யார்? தனக்கு அடுத்தபடியான தலைவர் யார் என்பது குறித்து அவர் தெரியப்படுத்தவில்லை என்பதும் தாக்குதலின் பின் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற் கொண்ட விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி மீண்டும் சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது சஹ்ரானின் மனைவி காயமடைந்து பொலிஸாரின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சகோதரனான ரில்வானும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் இறந்து விட்டார்.

ஆகவே சஹ்ரான் ஷங்கரி-லா ஹொட்டல் தாக்குதலின் போது அவர் உயிரிழக்கவில்லை அந்த தாக்குதலை அவர் வெளியிலிருந்து நடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகம் புலனாய்வு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த ஹொட்டலில் உயிரிழந்தவாின் உடற்பாகம் மரபணு பிரிசோதனைக்குட்டபடுத்தப்படும் என பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் புலனாய்வாளர்களின் சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையில், சஹ்ரான் மன்னார் கடற்பரப்பு வழியாக தமிழ்நாடு சென்று இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சஹ்ரான் இந்தியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதற்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஆகவே மன்னார் கடல் வழியாக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன என்று சிறிலங்கா இராணுவத் தளபதி,இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார் என அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

வெளியில் உள்ள அடிப்படைவாதிகளுடன் இணைந்து வலையமைப்பை உருவாக்குவதற்கு அவர் முற்பட்டிருக்கலாம். எனவே முன்னரும் சஹ்ரான் பெங்களூரு, காஷ்மீர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆகவே இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து, தவ்ஹீத் ஜமாத்தின் பிராந்திய வலையமைப்புகள் குறித்து, சிறிலங்கா விசாரித்து வருகிறது.

அந்த அமைப்பை சேர்ந்த பலர் தற்போது கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்று எமக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அவர்கள் அங்கு யாத்திரிகர்களாக செல்லவில்லை.

அவர்களில் இருவர் சலகை இயந்திர நேரக்கணிப்பு பொறிகளை வைத்திருந்துள்ளனர். தற்கொலைக் குண்டுதாரிகள் இணையத்தள வழிகாட்டல்களைப் பயன்படுத்தி குண்டுகளை உள்ளூரில் தயாரித்திருக்கலாம்

குண்டுத் தாக்குதல்களுக்கு TATP அல்லது triacetone triperoxide வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை மிகவும் சிக்கலான குண்டுகள் அல்ல எனவும் தெரிவித்திருந்தார்.

சஹ்ரான் தொடர்பான சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக படையினர் தொடர்ந்தும் உயர்ந்தபட்ச விழிப்பு நிலையில் உள்ளனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய அதிகாரிகள், இந்தியாவில் சஹ்ரானின் நடமாட்டங்களை தம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அந்த ஊடகத்திற்கு தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts