Ad Widget

யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் ஆயுத முனையில் கொள்ளை!

குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகிறார்கள். ஆனால் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி மூன்று இடங்களில் நேற்று திங்கட்கிழமை ஆயுதமுனையில் வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை-புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி பகுதியில் மூன்று வீடுகளில் 27 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பன ஆயுத முனையில் அபகரித்து செல்லப்பட்டுள்ளன.

வடமராட்சி- புலோலி தெற்கு உதயகதிர்காமர் கந்தமுருகேசனர் வீதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து அதிகாலை ஒருமணிக்கு ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களில் ஒருவரின் கழுத்தில் வாளினை வைத்து அச்சுறுத்தி 20 பவுண் நகைகள், 75 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு தொலைபேசிகள் என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து பருத்தித்துறை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளன. பொலிஸார் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறை சிறுப்பிட்டி பகுதியில் உள்ள இரு வீடுகளில் நேற்று அதிகாலை கொள்ளையர்கள் பெரும் அட்டகாசத்தால் ஈடுபட்டுள்ளனர்

அச்சுவேலி செலிங்கோ கிளை முகாமையாளரின் வீட்டிலும் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. அதிகாலை வீட்டின் பின்கதவு வழியாக நுழைந்த திருடர்கள் சல்லடை போட்டு தேடி அங்கிருந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளதுடன் பின்னர் அருகில் உள்ள வீட்டில் 7 பவுண் தங்க நகைகள், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பணம் என்பவற்றையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அச்சுவேலி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மக்கள் இரவு நேரத்தில் நடமாட்டம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்கள் அட்டகாசங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன.

Related Posts