- Thursday
- May 7th, 2026
முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து மோட்டார் சைக்கிளை செலுத்துவோரை அவசரக்காலச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவ்வாறு பயணிப்போரை கைது செய்து வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார். நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து...
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கிய மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இக்கடித்தில், இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில்...
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து, பௌத்த விகாரையை அமைத்து, சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியில், ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது சிங்கள பௌத்த மக்களுடைய விகாரை, இதை எமக்கு தர வேண்டும். அரசியல்வாதிகளுடைய, பயங்கரவாத தமிழ் மக்கள் குழுவுடைய குழப்பங்கள் காரணமாக, விகாரையில் குழப்பம்...
இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து எடுத்த முடிவைப்போன்று தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து முஸ்லிம் தலைமைகள் 9 பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின்...
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பல தசாப்தங்களாக பலிகொண்டுவரும் சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது...
யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் ஏறத்தாழ இரண்டே முக்கால் இலட்சம் மோட்டார் வாகனங்கள் வாகனவரி செலுத்தியுள்ளன. இவை தவிர, வேறு மாகாணங்களில் பதிவுசெய்யப்பட்ட பெருந்தொகையான வாகனங்களும் வடக்கில் பயன்பாட்டில் உள்ளன. காற்றை மாசுபடுத்துவதில் பெற்றோலிய எரிபொருட்களில்...
உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாருக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாரான திருமதி சுப்பிரமணியம் சின்னம்மாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வீடு அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கான நிதி வழங்குமாறு கிளிநொச்சியிலுள்ள சமூக ஆர்வலர்...
பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை கண்டறிவதில் தடையாக உள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் மீது முன்வைகபட்ட குற்றச்சாட்டை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்தனர். அத்துடன் குற்றவாளிகளை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மீது நம்பிக்கை இல்லாததால் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதகாலத்தில் உண்மைகளை கண்டறிய...
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுக்கும் சில பிரிவுகளின் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையிலநேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். முஸ்லிம் உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட...
இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு பீப்பாயில் நிரப்பிய ஓயில் டிராக்டர் மூலம் எடுத்து சென்றபோது அதில் இருந்து சரிந்து வீதியில் சிந்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர சபை ஊழியர்கள் வீதியில் மணல் நிரப்பியிருந்தனர். ஆனாலும் மணல் போட்டும்...
குண்டுத் தாக்குதலை பயன்படுத்தி நாட்டை தங்களது கைக்குள் கொண்டுவருவதற்கு இனவாதிகளின் பின்புலத்துடன் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் குழுவொன்று இயங்குகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நடைபெறுகின்ற போராட்டங்கள் தொடர்பாக தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே இரா.சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசினால் நியமிக்கப்பட்டவர்கள் குற்றம் இழைத்து இருப்பார்களாயின்...
ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற...
என்ரப்பிறைஸ் சிறிலங்கா எனும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வங்கிகள் கடன்தர மறுத்தால் 1925 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைத்து மக்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும். முறைப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர மக்களிடம் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டின் பாதீட்டின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 50 கைத்தொழிற்சாலைகளை பரிசீலிக்கும் நோக்கில் நேற்று மங்கள...
கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி பிரதேச மருத்துவ அதிகாரி பணிமனையின் ஊடாக பாடசாலையில் வைத்து போடப்பட்டது. ஊசி போடப்பட்டு சில நிமிடங்களில் மாணவிகள் சோர்ந்து...
ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றி விட்டார் என பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சமுா்த்தி பயனாளிகளுக்கான உாித்து பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மாவை சேனாதிராஜா பிரதமா் முன்னிலையில் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறியதாவது,...
தமிழ் மக்களால் தெரிவான ஜனாதிபதி எமது மக்களை வீதியில் விட்டுவிட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தில் 4 வருடங்களை வீணடித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கண்டியிலுள்ள வணிக சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டுமென கோரி, கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர்...
ரயில்களில் இன்று முதல் மீண்டும் பொதிகளைக் கொண்டு செல்ல முடியுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, தற்காலிகமாக ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதிகளைப் பொறுப்பேற்கும் ரயில் நிலையங்களில் பொதிகளைச் சோதனையிடுவதற்காக, விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு (VPN network) மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கைப் பொலிஸ் விபிஎன் வலையமைப்பு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிய போதும் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல்...
Loading posts...
All posts loaded
No more posts
