Ad Widget

வங்கிகளால் கடன் மறுக்­கப்­பட்­டால் 1925 க்கு அழை­யுங்­கள் -நிதி அமைச்­சர்

என்­ரப்­பி­றைஸ் சிறி­லங்கா எனும் திட்­டத்­தில் ஒதுக்­கப்­பட்ட வங்­கி­கள் கடன்­தர மறுத்­தால் 1925 என்ற அலை­பேசி இலக்­கத்­துக்கு அழைத்து மக்­கள் முறைப்­பா­டு­க­ளைப் பதிவு செய்­ய­ மு­டி­யும். முறைப்­பாட்­டின் பிர­கா­ரம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வேன் என்று நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர மக்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

2018ஆம் ஆண்­டின் பாதீட்­டின் பிர­கா­ரம் உரு­வாக்­கப்­பட்ட 50 கைத்­தொ­ழிற்­சா­லை­களை பரி­சீ­லிக்­கும் நோக்­கில் நேற்று மங்­கள சம­ர­வீர யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்­தார். அந்­தத் திட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம், பண்­டத்­த­ரிப்­பில் அமைப்­பட்ட பரிஸ் பல­நோக்­குக் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் தேங்­காய் எண்ணை, தூய தேங்­காய் எண்­ணெய், நல்­லெண்­ணெய் உற்­பத்­தித் தொழிற்­சா­லையை அவர் திறந்­தார். இந்த நிகழ்­வில் உரை­யாற்­றும் போதே அமைச்­சர் மங்­கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது-

வடக்கு மாகா­ணம் மீண்­டும் அபி­வி­ருத்தி அடைய வேண்­டும் அதற்­கான திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அபி­வி­ருத்­திக்­காக அதிக நிதி ஒதுக்­கீ­டு­கள் இடம்­பெ­று­கின்­றன. நுண்­க­ட­னால் பாதிக்­கப்­பட்ட பெண்­களை மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­யில் நிதி அமைச்­சும், மத்­திய வங்­கி­யும் இணைந்து செயற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. 45ஆயி­ரம் பெண்­கள் நுண் நிதி நிறு­வ­னங்க­ளின் மூலம் பெற்­றுக்­கொண்ட கடன்­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளன. அதற்­காக 140 கோடி ரூபா ஒதுக்­கப்­பட்­ருந்­தது.

என்­ரப்­பி­றைஸ் சிறி­லங்கா திட்­டத்­தின் ஒரு லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கத் திட்­ட­மி­ டப்­பட்­டுள்­ளது. இளை­ஞர்­க­ளு­டைய சுய­தொ­ழில் முயற்சி, கடற்­தொ­ழில் அபி­வி­ருத்தி, பெண்­க­ளின் சுய­தொ­ழில் என்று குறைந்த வட்­டி­யில் கடன்­க­ளைப் பெற்று மக்­கள் அபி­வி­ருத்தி நோக்­கிச் செல்­வ­தற்கு இலங்கை முழு­வ­தும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டதே என்­ரப்­பி­றைஸ் சிறி­லங்கா திட்­ட­மா­கும்.

ஆனால் அது வடக்­கில் சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அது தொடர்­பில் நாளை (இன்று) வங்­கி­க­ளின் முகா­மை­யா­ளர்­கள், பணி­யா­ளர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளேன். என்­ரப்­பி­றைஸ் லங்கா திட்த்­தில் சரி­யான முறை­யில் அணுகி கடன் கிடைக்­க­ வில்லை என்­றால் எனக்கு, எனது அமைச்­சுக்கு முறைப்­பா­டு­க­ளைச் செய்ய முடி­யும்.

1925 என்ற அலை­பேசி எண்ணை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளேன். அந்த இலக்­கத்­துக்கு அழைத்து இது தொடர்­பில் முறை­யி­ட­லாம். நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வேன்-­ – என்­றார்.

Related Posts