பாரதப் பிரதமரின் வருகை இலங்கை தொடர்பில் உலகுக்கு பல செய்திகளை சொல்லும்!!!

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை வழங்குவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும், மாலைதீவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்....

இலங்கையின் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட உள்ளன. அபராத தொகைகள் அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு நேற்றைய தினம் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம்...
Ad Widget

இரணைமடுக்குள புனரமைப்பில் மோசடி!!! விரைவில் சட்ட நடவடிக்கை!! – ஆளுநர்

இரணைமடுக்குள புனரமைப்பின்போது இடம்பெற்ற மோசடி குறித்து 2ஆம் கட்ட சட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். கிளிநொச்சியில் கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து, இரணைமடுக் குளத்தின் புனரமைப்பின்போது மோசடி இடம்பெற்றதாக மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றச்சாட்டுகளை...

விபத்தில் மூவர் பலி!! A9 வீதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!

திப்பட்டுவாவ கெக்கிராவ பிரதேசத்தில் டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு மாணவர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எரந்த இஷான் திலகரத்ன -14 வயது, இமந்த பசிந்து ஹேரத்...

குருநகர் வீடொன்றில் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்!!

கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்தனர். “அந்த வீட்டில் தனிமையில் வசித்து வருபவர் டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும் போது அது வெடித்துள்ளது. சம்பவத்தில் அவர் படுகாயமடைந்தார். சம்பவத்தையடுத்து...

இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, எதிர்வரும் 11ஆம் திகதி பரீட்சைத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் இராஜாங்க...

வடக்கு ஆளுநரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது – யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

வடக்கு ஆளுநர் தன்னை அச்சுறுத்தியதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நியமனம் தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பினரால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது பணிகளைச் செய்யவிடாமல் ஆளுநரின் செயலாளர் தடுத்ததோடு, கடமைக்கு...

யாழில் மாணவன் மீது வாள்வெட்டு!

நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது. முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல், அடாவடியில் ஈடுபட்டதுடன் மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. அண்ணனை...

பெருமளவு ஐ போன்கள், சிம் காட்களுடன் சீன நாட்டவர் கைது!!

நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 402 ஐபோன்கள், 17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் உட்பட மேலும் சில தொடர்பாடல் உபகரணங்கள் என்பன விசேட அதிரடிப்படையினரால் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் தங்கியிருந்த 2...

அதிபர் திட்டியதில் மயக்கமுற்ற ஆசிரியை வைத்தியசாலையில்

வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் அதிபர் ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிபர் நேற்றையதினம் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார். இதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தை...

முஸ்லிம்கள் தமிழர்களுடன் கைகோர்க்க வேண்டும் – கஜேந்திரன்

பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் உடைத்தெறியப்பட வேண்டுமாயின் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களுடன் கைகோர்க்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,...

யாழில் கைக்குண்டு மீட்பு!!

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள காணியை இன்று (வெள்ளிக்கிழமை) காலை காணி உரிமையாளர்கள் சுத்தம் செய்யும்போதே கைக்குண்டு இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அந்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப் படையினர், சம்பவ இடத்திற்குச் சென்று கைக்குண்டை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கைக்குண்டினை...

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமன விடையத்தில் புதிய திருப்பம்

யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுனர் அலுவலகம் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர முடியாதென்றும் முன்னைய நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மாகாண சுகாதார...

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு!! – ஞானசார தேரர்

“தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை – ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும். இதை இப்போதே நாம் உணருகின்றோம்.” இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-...

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் மாவை சேனாதிராஜா!!!

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சந்தித்தார். இதுபற்றி, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பின், இலங்கையில் உள்ள, தமிழர் தலைவர்கள் யாரும், ஸ்டாலினை சந்தித்து பேசவில்லை. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி...

யாழ் இந்து மாணவன் சிங்கப்பூர் பயணமாகிறார்!!

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்ற ‘மூளை முகாம்’ (Brain Camp) என்ற விஞ்ஞான ஆய்வு பயிற்சிக்காக இலங்கையிலிருந்து பங்குபற்றும் குழுவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் தேவானந்த் அபிராம் தெரிவு செய்ப்பட்டுள்ளார். சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் எண்டுவெமென்ட் புரோகிராம் (STEP) என்ற அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இணைந்து இந்த விஞ்ஞான ஆய்வு பயிற்சித்திட்டத்தை நடத்துகின்றன. ஜூன்...

பாடசாலைகளின் பாதுகாப்பு பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை!!

பாடசாலைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, பாதுகாப்பை வழங்கும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றோரை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கல்வி அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டில்...

இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் – முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை!

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. பொறுமையானவர்கள், அமைதியான நாட்டவர்கள் என்று இலங்கையர்கள் பெற்றுக்கொண்டுள்ள நற்பெயரை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பல வன்முறைச்...

தாக்குதல் குறித்த விசாரணைகள் – ஜனாதிபதிக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச்சாட்டுக்கள்!

பிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இங்கு...

வீதியில் சென்ற மாணவர்களை மோதித் தள்ளிய ஓட்டோ!!! சாரதியை தப்பிக்க வைக்கும் முயற்சியில் பொலிஸார்??

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட ஐவரை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டிச் சாரதி, வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட மூவர் வீதியின் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டனர். அதனால் மாணவர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts