யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள காணியை இன்று (வெள்ளிக்கிழமை) காலை காணி உரிமையாளர்கள் சுத்தம் செய்யும்போதே கைக்குண்டு இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அந்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப் படையினர், சம்பவ இடத்திற்குச் சென்று கைக்குண்டை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டினை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையினை விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்து வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.