போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் தகவல் வழங்கவும் – பொலிஸ்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பிலான தகவல்களை தமக்கு தந்து உதவுமாறு தென்மராட்சி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தசநாயக்க கோரியுள்ளார். போதை பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கொடிகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை!

நாட்டின் வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வுகூறி­யுள்­ளது. அதன்­படி குறித்த மாகா­ணங்­க­ளுக்குள் உள்­ள­டங்­கு­கின்ற 12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், புத்­தளம், திரு­கோ­ண­மலை, பொலன்­ன­றுவை,...
Ad Widget

போதைப்பொருள்களைப் பிடிக்கச் சென்ற சுகாதாரத் துறையினருக்கு உயிர் அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணம், நாவந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த வீட்டை சோதனையிட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பாக்குப் பொதிகளை மீட்டுள்ளனர் என்று...

காலை எட்டு மணியை கடந்தும் ஏ9 வீதியில் காத்திருக்கும் மாணவர்கள்!

பாடசாலைக்கு செல்வதற்காக புறப்பட்டு ஏ9 பிரதான வீதிக்கு வருகின்ற போதும் பேருந்து ஏற்றிச்செல்லாத காரணத்தினால் காலை எட்டு மணியை கடந்தும் வீதியில் காத்திருக்கும் அல்லது வீடுகளுக்கு திரும்பிச்செல்லும் நிலைமை பரந்தன் உமையாள்புரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காணப்படுகிறது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் உமையாள்புரம், பகுதிகளில் இருந்து கிளிநொச்சி நோக்கி சில பாடசாலைகளுக்கு செல்கின்ற...

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்!!

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவா குழுவின் உறுப்பினர்களுடன் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நட்பு வைத்துள்ளார் என்று தெரிவித்தே தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை பொல்லுகள் மற்றும் போத்தல்களால் தாக்கியுள்ளதாக யாழ்ப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்...

மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – மாவை

எமது மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் வாள் வெட்டு என்ற வன்முறைப் போக்கினை எதிர்காலத்தில் இல்லாமற்செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில், புதிய தமிழ்நாதம் பத்திரிகையை வெளியிட்டுவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்குச் சென்றையடுத்து இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் இடம்பெறவுள்ள ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த...

தமிழ் பொலிஸ் அதிகாரி கொலை வழக்கு ; கருணா அணியினரின் உறுப்பினர் தற்கொலை முயற்சி!!

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப்படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற...

யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான வீதி காணமல் போய் உள்ளது!!

சிட்டிசன் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் அந்த திரைப்படத்தில் அத்திப்பெட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் இங்கும் அதுவும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. யாழ்.மாநகர சபை வீதிகளின் பதிவேடுகளின் பிரகாரம் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான வீதி ஒன்று காணமல் போய் உள்ளது. ஜிம்மா...

அதிகரிக்கப்படுகிறது முச்சக்கரவண்டி கட்டணம்!

பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டென் 92 வகை பெற்றோல் ஒரு லீற்றரின் விலை, 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் முதலாவது...

இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக சங்கத்தின் நாராஹேன்பிட்டி தலைமையக செயலாளர் ரஞ்சித் விஜேசிறி தெரிவித்துள்ளார். சில கோரிக்கைகளை முன்வைத்து...

ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தவராசா முறைப்பாடு – ஆதாரத்தையும் வெளியிட்டார்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில்...

கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் முழுமையான தீர்வை எதிர்பார்ப்பது தவறு – கஜேந்திரகுமார்

தமிழர்கள் அடியோடு நிராகரித்துள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்திவிட்டு, அரசாங்கத்திடமிருந்து முழுமையான தீர்வை எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

ரௌடிகளால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் சாவு!! ; உடுவிலில் பதற்றம் – பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு

சுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து உறவினர்கள் உள்பட ஊரவர்கள் குழப்பமடைந்ததுடன், தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர். சம்பவத்தில் உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த...

பாதுகாப்புச் சோதனையின் பின்னரே மடு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி!

எமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலையிலே பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து மக்களும், பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உற்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார். மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான...

பெற்றோல் விலை அதிகரிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமை ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை நேற்று நள்ளரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் புதிய விலை 138 ரூபாவாகும். அத்துடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இ.போ.ச. ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது

இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வை இரத்து செய்ய சூழ்ச்சி இடம்பெறுவதாக தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும் நேற்று உண்ணாவிரதப்...

தமிழ் பிரபாகரனால் பட்டபாடு போதும்! முஸ்லிம் பிரபாகரன் வேண்டாம்!!! முல்லைத்தீவில் ஜனாதிபதி

தமிழ் பிரபாகரனால் நாங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தோம். அவ்வாறிருக்க முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கயந்த கருணாதிலக, தயா...

இந்தியாவிற்கு வாருங்கள், தீர்வு பற்றி பேசுவோம்: கூட்டமைப்பிற்கு மோடி அழைப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு நடந்தது. சந்திப்பின் தொடக்கத்தில், மோடி இரண்டாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றத்திற்கு இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்தார். இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார் மோடி. முன்னதாக திட்டமிட்டதை விட குறைவான நேரமே இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பிற்கு முன்னதாக இடம்பெற்ற மஹிந்தவுடனான...

பயங்கரவாத தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும்

பயங்கரவாத தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் மோடி, நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உயிர்த்த தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை சென்று பார்வையிட்ட இந்தியப் பிரதமர் இதனை தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதுடன் .பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர்,...
Loading posts...

All posts loaded

No more posts