Ad Widget

போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் தகவல் வழங்கவும் – பொலிஸ்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பிலான தகவல்களை தமக்கு தந்து உதவுமாறு தென்மராட்சி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தசநாயக்க கோரியுள்ளார்.

போதை பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கொடிகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள இளையோரை அதில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். கஞ்சா ஹெரோயின் போன்ற போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன. அவற்றை விரைந்து தடுத்து நிறுத்த வேண்டும். அதன் முழுப்பொறுப்பும் ஒவ்வொருவரிடமும் உண்டு.

இளையோர் அதிகமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். அதனை தடுத்து நிறுத்த வேண்டும். எனவே போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் எமக்கு தகவல் தாருங்கள். நாங்கள் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களை அதில் இருந்து மீட்டெடுக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த போகின்றோம்.

அதேவேளை போதை பாவனையில் இருந்து மீட்டெடுக்க அனைவரினது ஒத்துழைப்பும் எமக்கு தேவை என தெரிவித்தார்.

Related Posts