Ad Widget

தமிழ் பிரபாகரனால் பட்டபாடு போதும்! முஸ்லிம் பிரபாகரன் வேண்டாம்!!! முல்லைத்தீவில் ஜனாதிபதி

தமிழ் பிரபாகரனால் நாங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தோம். அவ்வாறிருக்க முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கயந்த கருணாதிலக, தயா கமகே, காமினி ஜயவிக்கிரம பெரேரா, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், சிவமோகன் மற்றும் அரச, பாதுகாப்புதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

நான் இன்று மகிழ்ச்சியாகவே முல்லைத்தீவிற்கு வந்தேன். எனக்கு முன்னதாக 5 நிறைவேற்று ஜனாதிபதிகள் இருந்தனர். நான் 6வது ஜனாதிபதி. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மக்கள் 80 வீதமான வாக்குகள் எனக்களித்தனர். அதை நான் மறக்க மாட்டேன். அதற்கு எனது நன்றிகள்.எனக்கு முன்னதாக 5 ஜனாதிபதிகள் இருந்தார்கள் என ஏன் சொன்னேன் தெரியுமா? முல்லைத்தீவிற்கு பலமுறை வந்த ஒரே ஜனாதிபதி நான்தான். மற்றைய ஜனாதிபதிகள் பல வருடங்கள் பதவியிலிருந்தபோதும், நான்கரை வருடம் ஜனாதிபதி பதவியிலிருந்த நானே வடக்கிற்கு அதிகமுறை வந்த ஜனாதிபதி.முல்லைத்தீவில் மட்டுமல்ல, வடக்கிலும் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று வறுமை.மொழி, மதம், இனம், சாதி அடிப்படையில் பிரிந்துள்ளோம்.

நாம் ஒன்றாக இல்லை. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதான சவால் அது. இதனால்தான் நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற திட்டத்தை உருவாக்கினோம்.இந்த மாவட்டத்தின் சனத்தொகை 1,25,000 இற்கும் குறைவானது. நாங்கள் இந்த மாவட்டத்திலே 1178 வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 1800 வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். 1178 வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்துள்ளோம்.

இந்த வேலைத்திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவராவது இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். 68,000 குடும்பங்கள் இந்த திட்டங்களால் பலனடைந்துள்ளனர்.இந்த பகுதிக்கு வந்த பின்னர் இங்குள்ள முக்கியமான பிரச்சனையொன்றை அறிந்துள்ளேன். உங்களுடைய காணி உறுதி யுத்தத்தில் அழிந்தன. காணாமல் போயுள்ளன.

காணி உறுதி அத்தாட்சி பத்திரமில்லாததால் வங்கி கடனை கூட பெற முடியாதுள்ளது. ஆனால் காணி வரைபடம் இருக்கலாம். உங்களிற்கு காணி உறுதிப்பத்திரம் இல்லாவிட்டால் கூட, வங்கி கடனை பெற விசேட வழியொன்றை உருவாக்கிதர தீர்மானித்துள்ளேன்.மகாசங்கத்தினர் ஒன்றாக இருந்து நாடு பிளவடையாமல் செயற்பட வேண்டும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். நான் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும்.

அவர்களிடமும் ஒற்றுமையில்லை.இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ளது. அதை இலக்காக வைத்து பலர் வேலை செய்கிறார்கள். அதனால் நாடு பிரிந்துள்ளது. தவறாக செயற்படுபவர்களை நிராகரிக்க வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பின் பின்னர் 300 இற்கும் அதிகமானவர்கள் கொல்ப்பட்டனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. உல்லாச பயணத்துறை அதளபாதாளத்திற்கு விழுந்துள்ளது. இனங்களிற்கிடையில் பிளவு அதிகரித்துள்ளது.

அதனால் பயங்கரவாதிகளின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது. அவர்கள் நாட்டை பிரிப்பதற்காகத்தான் குண்டை வெடிக்க வைத்துள்ளனர்.அரசியல்வாதிகள் நாட்டை இன,மத ரீதியாக பிரிக்கிறார்கள்.

இன,மத, மொழி, சாதி அடிப்படையில் பிரிவு அதிகரிக்கிறது. இது அழிவானது. அந்த பயங்கரவாதிகள் எந்த நோக்கத்துடன் குண்முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை ஒருவாக்க நீங்கள் இடமளிக்க வேண்டாம்.

வடக்கில் ஒரு பிரபாகரன் உருவாகி, பெரும் பிரச்சனை ஏற்பட்டது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பலர் கொல்லப்பட்டனர். அந்த அனுபவம் எங்களிடம் உள்ளது. நாட்டில் ஒரு முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கவே எப்ரல் 21 தாக்குதல் நடந்தது.

நாங்கள் அந்த பொறிக்குள் விழக்கூடாது. எனவே நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையாக வாழ வெண்டும்.இந்த வருட இறுதி தேர்தலை இலக்காக வைத்து அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள்.

இனவாதத்தை தூண்டி வெற்றியடைய முயற்சிக்கிறார்கள்.முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இங்குள்ள வளங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் எனக்கு கூடுதல் விருப்பம் உள்ளது. அது ஏன் தெரியுமா? இலங்கையில் காடு அடர்த்தியான மாவட்டம் முல்லைத்தீவுதான். அதை நீங்கள்தான் பாதுகாத்தீர்கள்.ஒரு வருடத்தில் 1.5 வீதம் காடழிக்கப்படுகிறது. இன்னும் 15 வருடத்தில் இந்த நாடு பாலைவனமாகி விடும்.

ஒருவர் அண்மையில் சொன்னதாக இன்று பத்திரிகையில் பார்த்தேன், மரம்வெட்டும் இயந்திரங்களை தடுத்தால் இறுதி யாத்திரைக்கு பிரேதப்பெட்டிகளும் இல்லாமல் போகலாம் என. அவருக்கு தெரியவில்லை, பிரேதப்பெட்டிகள் அங்கு செய்யப்படுவதில்லை. இயந்திரங்களை பயன்படுத்தி கள்ளமரங்களே வெட்டப்படுகின்றன என்றார். நிகழ்வில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரமும், 1100 பேருக்கு காணி உரிம பத்திரமும், 13,643 குடும்பங்களிற்கு சமுர்த்தி உரித்து அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டன.

Related Posts