Ad Widget

பாடசாலைகளின் பாதுகாப்பு பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை!!

பாடசாலைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, பாதுகாப்பை வழங்கும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றோரை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கல்வி அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டில் தற்போது சுமுகமான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தாக்குதலின் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதீத கவனஞ்செலுத்தி வருவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

அந்தவகையில், தற்போதைய சூழலில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை என மீண்டும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts