Ad Widget

அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம்

நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கண்டியிலுள்ள வணிக சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டுமென கோரி, கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்தன தேரர் நடத்தி வருகின்றார்.

மேலும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன தேரர், நீர் மாத்திரம் அருந்திப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில் ரத்தன தேரரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் ஏனைய பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கண்டியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts