- Thursday
- May 7th, 2026
ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். அந்தவகையில், வரும் நவம்பர் 9 இலிருந்து டிசம்பர் 9 இற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, டிசம்பர் 7ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவேண்டும் என தேர்தல் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். அத்துடன்,...
மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபை பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. கிறிஸ்தவ சபையினர் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடங்களாக உள்ளே வைத்துள்ளதாக தெரிவித்தும் தனது மகளை மீட்டுத்தருமாறு கோரியும் தாய் ஒருவர் குறித்த சபைக்கு முன்பாக போராட்டம் நடாத்தினார். இதன்போது குறித்த தாயை...
யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியும் - நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை ஆராதனையின் பின்னர் யாழ் முஸ்லீம் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறித்த ஆர்ப்பாட்டமானது யாழ் முஸ்லிம் சமூகத்தினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையிலும், அவ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் கண்டனம் வெளியிட்டு குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு...
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் 2016 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் பூசை செய்த அர்ச்சகர் ஒரு முஸ்லிம் இனத்தவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2016 – 2017 காலப்பகுதியில் மருதனார்மடம் இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் பிரதீப சர்மா என்ற பெயரில் பூஜை செய்தவர் கெக்கிராவையைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் முகமட்...
வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னர் தெரியவந்தது. இந்த கொலை விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் போராளிகளை இணைத்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதுடன், இருவர் கைதாகி தற்போது விடுதலையாகியுள்ளனர். இதனிடையே இந்த சம்பவத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் கட்டளையில் ஆயுதங்களை...
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழாவில் நேற்று மாலை திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து கந்தன் வெளி வீதியுலா வரும் காட்சி நிறுத்தப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் கற்பூர திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 1008 சங்குகள் வைத்து சங்காபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முத்துஐயன்கட்டு புனிதபூமிக்கு திரும்புகின்ற சந்திப் பகுதியில் குறித்த விபத்தநேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, காயமடைந்த 7 மாணவர்களும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு...
போருக்கு பின்னரும் மன்னார் பிரதேச பாடசாலைகள் புத்தளத்தில் தற்போதும் இயங்கி வருகின்றமைக்கு கல்வி உயர் அதிகாரிகளின் அசமந்தமே காரணம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடுமையாக சாடினார். மன்னார் பிரதேச பாடசாலைகள் தற்போதும் புத்தளத்தில் இயங்குவதால் மன்னாரைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விடயம்...
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்படுகின்றனர். சம்பத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணி பெண் உள்பட ஒன்பது பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள மேலும் 80 அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த அகதிகளை இன்று (வியாழக்கிழமை) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள்...
வடமராட்சி உடுப்பிட்டியில் நாள் தோறும் அரங்கேறும் கொள்ளைகளின் பின்னணியில் லக்கி குழு எனும் போதைப்பொருள் கும்பல் உள்ளமை அம்பலமாகியுள்ளது.அதிலும் வல்வெட்டித்துறை காவல்துறையின் முழுமையான ஆசீர்வாதத்துடன் இக்குழு செயற்படுவதும் அம்பலமாகியுள்ளது. இக்குழுவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டினில் கைதான கும்பலை சேர்ந்த பலர் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். வடமராட்சி பகுதியில் கடந்த இரண்டுவருடகாலமாக தொடர் கொள்ளைகள் பல அரங்கேற்றப்பட்டுவந்த...
அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர். யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும் , தீவக பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும்...
கிளிநொச்சியில், செல்வாநகர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் காயமடைந்துள்ளனர். பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில்...
தென்மராட்சி-மறவன்புலோ பகுதியில் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேச செயலர் தேவந்தினி பாபு தலைமையிலநேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில், காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தினர், மத்திய சுற்றாடல் திணைக்கள வட மாகாண உதவிப் பணிப்பாளர், பொலிஸ் அதிகாரி, கிராம மக்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்....
பாதிக்கப்பட்டோரும், பாதிக்கப்பட்டோரோடு பயணிப்போரும் இணைந்து பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், பயனும் குறித்து சுயமதிப்பீடு செய்யும் நோக்கோடு மாநாடு ஒன்றை றோட்டரிக் கழகம் யாழ்ப்பாணம் DATA அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்கின்றது. இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை காலமும் சந்தித்தவையும், சாதித்தவையும் ஆராயப்படுவதோடு இனிவருங்காலங்களில் அவர்களது வாழ்வுப்பயணம்...
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் மாணவன் ஒருவன், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த மாணவனும் அவனது...
“விடுதியின் பணியாளர் விடுதிக்குள் தற்கொலை செய்து பிணமாகக் கிடக்கின்றார். அவரின் முதலாளியான நீர் சடலத்தைக் கூடப் பார்க்கச் செல்லவில்லை. என்ன மனிதாபிமானம் இருக்கின்றது” என்று யாழ். நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கடுமையான சினத்தை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் நேற்றமுன்தினம் (திங்கட்கிழமை) துாக்கிட்டு தற்கொலை செய்து...
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்காக கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது. ஐ.எஸ் அமைப்புக்கு...
வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அனைத்து சமூக மக்களிற்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஜன இயக்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த போராட்டத்தில், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமாரும் கலந்து கொண்டு, தமது ஆதரவை தெரிவித்துள்ளார். ஆலயத்தின் திருவிழாவில் ஒரு...
சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துமாறு புதிய சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபரிடம் ஆளுநர் கோரிக்கை!!
வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரவி விஜயகுணவர்தன ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (28) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் இடம்பெறும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பிலும் , யாழ்மாவட்டத்திலே அதிகளவிலான சமூக விரோத செயல்கள் காணப்படுவதாகவும் அவற்றை...
Loading posts...
All posts loaded
No more posts
