Ad Widget

சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துமாறு புதிய சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபரிடம் ஆளுநர் கோரிக்கை!!

வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரவி விஜயகுணவர்தன ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (28) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் இடம்பெறும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பிலும் , யாழ்மாவட்டத்திலே அதிகளவிலான சமூக விரோத செயல்கள் காணப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

மேலும் சட்டவிரோத மண்அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், வடமாகாணத்தில் முக்கியமாக மக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறு காவல்துறையினர் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஆரோக்கியமான செயற்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் எனவும்ம் ஆளுநர் புதிய சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

Related Posts