- Wednesday
- May 6th, 2026
வேலையற்ற பட்டதாரிகளில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் நாடு பூராகவும் வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 800 பேருக்கான நியமனத்தில் வடக்கு மாகாணம் முழுமையாக ஆயிரத்து 905 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் 5 மாவட்டச் செயலகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியில் சேகரிக்கப்பட்டு அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்ற நிலையில்...
2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டை இதவரை கிடைக்கப் பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் திணைக்களம் அறிவித்துள்ளது. https://doenets.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இணையத்தளத்தில்...
மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது தப்பிச்சென்ற வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த மூவரையும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் இணுவில் வீதியில் கடந்த சனிக்கிழமை இரவு...
கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா சகாதேவன் (62) என்ற தமிழ் அரசியல் கைதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 2005ம் ஆண்டு குறித்த தமிழ்...
வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக NVQ தகமை மட்டம் III அல்லது IV வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்று கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரம் (3000) இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி...
யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறும் கோரியும் இன்று சனிக்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் இன்று காலை 10 மணிக்கு காங்கேசன்துறை வீதி யாழ்.நகரப் பகுதியில் நடைபெற்றது. யாழ்.நகரின் மத்தியில்...
அம்பாந்தோட்டையை விற்று, கொழும்பை விற்று காலியை விற்று, தெற்கையே விற்று, இப்போது வடக்கையும் வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்ற நிலைமை உருவாகிவிட்டது. நாளை சீன மக்களோ மலேசிய மக்களோ குடியேறி விடுகின்ற நிலை ஏற்பட்டால்கூட அந்தத் தமிழ்த் தரப்பினருக்கு அது பிரச்சினை இல்லை. உடனேயே தங்களது கட்சியின் பெயரை சீன தேசியம் என்றோ, மலேசிய தேசியம் என்றோ...
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர்...
கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற் முன்பாக நாளை பிற்பகல் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என சைவ மகா சபை அறிவித்துள்ளது....
யாழ்ப்பாணம் நாவாந்துறை – பொம்மைவெளியில் முஸ்லிம் பிரதிநிதியால் உரிமை கோரப்படும் காணியில் மாதா சொரூபம் ஒன்று நேற்றிரவு அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நாவாந்துறை – பொம்மைவெளியில் உள்ள அரச காணியை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அபகரித்து வைத்துள்ளார் என்றும் அதனை தமக்கு பகிர்ந்து வழங்குமாறும் தமிழ் மக்கள் நேற்று வலியுறுத்தினர். அத்துடன், அந்தக் காணிக்குள்...
யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறு கோரியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 10 மணிக்கு காங்கேசன்துறை வீதி யாழ்.நகரப் பகுதியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரின் மத்தியில்...
வவுனியா, செட்டிகுளம் பகுதியின் கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கங்குளத்தில் வசித்து வந்த ர.இன்பராணி என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கணவன் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதுடன் அண்மைக்காலமாக மனைவி கங்கங்குளத்தில் தனியாக வீடொன்றில் வசித்து வந்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப் பட்டியல்கள் அனுப்பப்பட்டுள்ளது. அப்பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்த 325 வரையானோர் பாதிக்ப்பட்டுள்ளனர். இ துகுறித்து பலஇடங்களில் முறையிட்டும் எவ்விதபலனும் கிடைக்கவில்லை. எனவே இதற்கு தீர்வினை காணவும்...
யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது. அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம்...
அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் விபச்சார விடுதி இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வீட்டில் தங்கியிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட்ட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர். அதுதொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது...
வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை மீண்டும் உயர் நிலைக்கு கொண்டு வருவதற்காக வட. மாகாண கல்வியமைச்சின் செயலாளராக புதியவரை நியமித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ். இந்து மகளிர் கல்லூரியில் வட மாகாண கல்வித் திணைக்களத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச யோகா தின நிகழ்வில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய...
கல்முனை உண்ணாவிரதப் போராட்டத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு இல்லாவிடின், இந்தப் போராட்டம் நாடளாவிய ரீதியில் பரவி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று...
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் மதுபோதையில் இருந்தமையால் பஸ்ஸில் பயணித்தோர் அச்சத்துடன் பயணித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது; யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட இ.போ.ச. பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் மதுபோதையில் இருந்துள்ளனர். நடத்துனர் பஸ் கட்டணத்தை...
கிளிநொச்சி மதிய ஆரம்ப பாடசாலைக்கு உரிய காணியை ஆக்கிரமித்தும் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எதுவித பலனுமில்லை என்னும் செய்தி ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதுமாகும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார். 25 வருடங்களாக வாழ்வாதார சுயதொழிலாக வெதுப்பாக உற்பத்தி நிலையத்தை மேற்கொண்டு வருவதோடு, 15க்கும் மேற்பட்டோர் இவ் வெதுப்பக...
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த சி.சத்தியசீலனை தனது புதிய செயலாளராக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார். அதேவேளை இதுவரை காலமும் ஆளூநரின் செயலாளராகவிருந்த எல்.இளங்கோவன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை எல்.இளங்கோவன் நான்கு வடமாகாண...
Loading posts...
All posts loaded
No more posts
