- Wednesday
- May 6th, 2026
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த விசாரணை நேற்று முன்தினம் (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவரால் அச்சுறுத்தல் உண்டு எனவும் பொலிஸாரால்...
கல்முனை பிரதேச செயலகம் விரைவில் வர்த்தமானி அறிவிப்புடன் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேலும் இதற்காக அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதால், மீண்டும் ஒரு அமைச்சரவை பாத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கல்முனை வடக்கு தமிழ்...
இலங்கை மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை ஐ.எஸ்.அமைப்பு நடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய உளவுப்பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் குறித்து மூன்று எச்சரிக்கை கடிதங்களை இந்திய உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளுக்கு றோ அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் றோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை...
இலங்கையில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டவர்கள் சிரியா- ஈராக் ஆகிய நாடுகளில் முன்னர் தீவிரமாக செயற்பாட்டில் ஈடுபட்ட ஐ.எஸ் உறுப்பினர்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் உவா நகரில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான சர்வதேச கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது யூரிகொகோவ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்...
இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்துவர ஐ.நா. உதவிபுரியவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோர்ன் சேரேன்செனிடம் (Joern Soerensen) கோரிக்கை விடுத்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Mr.Joern Soerensen, ஆளுநர் கலாநிதி...
பெரும்பான்மை கட்சிகளில் ஒரு கட்சி மலைப்பாம்பு என்றால், மற்றைய கட்சி விஷப்பாம்பு என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர்களில் எந்த பெரும்பான்மை கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்கள மயமாக்கும் அவர்களின் திட்டம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கப்போகின்றது என்றும் கூறினார். மகாவலி திட்டம் தொடர்பாக வினவப்பட்ட கேள்விக்கு பதிலைக்கும்போதே...
கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதியுள்ள பணியிலிருக்கும் தம்மை தகுதி கோரப்படாத பதவியிலிருப்போர் தகுதியில்லை என கூறுவதாக குற்றம் சாட்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் பொது மக்கள் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கல்வி இராஜாங்க...
வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரத்து 117 தொண்டர் ஆசிரியர்களுக்கு வரும் 27ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்படவுள்ளது. அவர்களது பெயர் விவரங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பிரிவு வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு வரும் 27ம் திகதி 2 மணிக்கு இல.294, திருகோணமலையில் உட்துறைமுக...
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தாது விட்டால் அரசாங்கத்திற்கு வழங்கும் தமது ஆதரவை விலக்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்....
பதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய அப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்று (புதன்கிழமை) மீண்டும் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர்கள் இன்று தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை...
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சம்மேளனம் அறிவித்துள்ளது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கையை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன தெரிவித்தார்....
போரை வழி நடத்திய தளபதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னை எண்ணுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டடோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 850ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட கொட்டகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்...
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பத்துடன் தொடர்புடையவர்களெனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறீசற்குணராசாவை நியமிக்கும் பரிந்துரையை பல்கலைக்கழக பேரவைக்கு முன்வைக்க தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை ஸ்திரமானதாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கும் வகையில் இந்த நியமனத்தை செய்வதற்கான அனுமதியை வரும் 29ஆம் திகதி இடம்பெறும் பல்கலைக்கழக பேரவையில் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கோரவுள்ளார் என்று...
மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் உடுவில் கடவுள் சந்திதியில் வசிக்கும் 74 வயதுடைய திருமதி ஐயாத்துரை என்ற வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும்...
இலங்கை மின்சார சபை பாவனையாளரின் நன்மை கருதி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இலங்கையின் மின்சாரப் பாவனையாளர்கள் அனைவரின் நலன் கருதி இலங்கை மின்சார சபை “CEB Care” என்ற செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது மின்கட்டணம் செலுத்த , கட்டண விபரங்கள் அறிய , மின்தடை குறித்த முன்னறிவித்தல்களைப் பெறுவது உள்ளிட்ட பல வசதிகள்...
அமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என்பதற்கு தன்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அச்ச சூழ்நிலையில் நிலைமைகளை கையாள்வதற்காக அமெரிக்க படைகள் இலங்கைக்கு வருவதற்கான சத்திக்கூறுகள் தொடர்பாக கேட்கப்பட்ட...
யாழில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை நாட்டின் சட்டதிட்டத்திற்கு முரணான விடையம் அன்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற சோசலிச மக்கள் முன்னணியின் ஊடக...
கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியதுடன் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி...
காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார். இந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
