வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை மீண்டும் உயர் நிலைக்கு கொண்டு வருவதற்காக வட. மாகாண கல்வியமைச்சின் செயலாளராக புதியவரை நியமித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் வட மாகாண கல்வித் திணைக்களத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச யோகா தின நிகழ்வில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை காலமும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக விளங்கிய இளங்கோவன் நேற்று மாகாண கல்வியமைச்சின் செயலளாராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த சி.சத்தியசீலனை தனது புதிய செயலாளராக ஆளுநர் நியமித்தார்.
இந்த இடமாற்றம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த இடமாற்றத்திற்கான காரணத்தை அவர் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.