- Tuesday
- April 28th, 2026
கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குளியாபிட்டியவைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் 14ஆவது நபர் உயிரிழந்துள்ளார். நிமோனியா மற்றும் இதய நிலை காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்தவரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவருக்கு...
நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரு தடவைக்கு மேல் தோற்றுபவர்கள் பொது அறிவுப் பரீட்சையில் முன்னைய ஆண்டில் 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால் இம்முறை அந்தப் பாடத்துக்கான பரீட்சைக்குத் தோற்றவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். பரீட்சைகள் ஆணையாளர், சனத் பூஜித விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நேற்றைய இரண்டாம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தல் போன்ற எந்த தீர்மானங்களும்...
வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தசமியில் வித்யாரம்பம் செய்வது குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 16 நிமிடம் வரை நவமி திதி நிற்பதனால்....
நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, அடையாளம் காணப்பட்டவர்களில் கட்டுநாயக்கவில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆறு பேர் பேலியகொட மீன் சந்தைத் தொழிலாளர்கள் எனவும் ஏனைய 22 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்...
வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் இரண்டு தொழிலாளர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மூவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீதிச் சீரமைப்பு பணியில் ஈடுபடும் 5 தொழிலாளர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். வவுனியா பிராந்திய சுகாதார...
வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் பணியாற்றும் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் தலையீடுகள் காரணமாக குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை யாழ்ப்பாணம் தலைமையகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க மறுத்த நிலையில், பொலிஸ் மா...
மினுவாங்கொட கொரோனா கொத்தணியிலிருந்து, துணைக் கொத்தணிகள் உருவாகுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே இதனை தெரிவித்தார். “வைரஸ் சமூக பரவலுக்கு வழிவகுக்குமா அல்லது அது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரவியிருக்கிறதா என்பதை அடையாளம் காண நிலைமையை கண்காணிக்க...
நாட்டில் நேற்றையதினம் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 166 பேருக்கும் வெளி நாட்டிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 2,464 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நட்டில்...
பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில் ,இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆகையால் வடமாகாணத்தில் பின்வரும் செயற்பாடுகளை...
கொழும்பு மாவட்டத்தில் ஐந்து பொலிஸ் பரிவுகளுக்கு உடடினாய அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டல் மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்கு உத்தரவானது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த மூன்று வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வவுனியா – நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மூன்று வியாபார நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப்...
ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ளக்கூடிய...
வவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். இந்நிலையில் அவர்களில் 25 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன....
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மினுவாங்கொட கொத்தணியிலிருந்து கொரோனா சந்தேகத்தின் பெயரில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் ஒரு தொகுதி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு தொகுதியினருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரதி பணிப்பாளர், பிரதம கணக்காளர் தாதியர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படத்துக்கு...
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முதியவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, முதியோர் இல்லங்கள் மற்றும் முதியவர்கள் இருக்க கூடிய வீடுகள் இது குறித்து அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியின் தொடர்ச்சியாக மேலும் 120 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மாலை (ஒக்.20) கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார். நேற்று மட்டும் 180 பேர் கோரோனா தோற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடுத்து 2 ஆயிரத்து...
நாட்டில் கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று ஒரு பூகோளபரம்பல் தொற்றுநோயாகும் இதன் தொற்று வீதம் சாதாரண தொற்று...
Loading posts...
All posts loaded
No more posts
