- Tuesday
- April 28th, 2026
குருநகர் மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த இருவருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாசையூர் மேற்கில் உள்ள கடலுணவு நிறுவனம் ஒன்றிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று திரும்பியதும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இவர்கள் பேலியகொட சென்று திரும்பிய மறுநாளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அண்மையிலுள்ள...
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியும் நுகேகொடையும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவு, அதிகம் ஆபத்தான பகுதிகளின் விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவு இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “27 பொதுசுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் ஆபத்தானவையாக காணப்படுகின்றன. இதில் கொழும்பில் ஏழு...
கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இன்று (27) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள்...
கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் அபாயத்தில் உள்ள மாவட்டங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டினார்....
யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்றையதினம்...
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்புத் தொடர்பான கட்டளைச் சட்டம் தொடர்பான வர்த்தமானியை வடக்கு மாகாணத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், பொலிஸாருக்குப் பணித்துள்ளார். அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள், முகக் கவசம் அணியாதோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடகக்கு...
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து என கோப்பாய் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அப்பகுதி மக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அத்தோடு, கடிதத்தின் பிரதிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்டச் செயலர், பாதுகாப்புப்...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும்...
உக்ரைனிலிருந்து வந்த விமான பணியாளர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவரே இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலைக்கு காரணம் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அறிக்கையில் புலனாய்வு அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துருக்கியிலிருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்த உக்ரைன் பிரஜைகள் சீதுவையில் உள்ள...
வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால்...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கோவிட்-19 தொற்று நிலமை காரணமாக ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே.அழககோன் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாராஹேன்பிட்டி மற்றும் வேரஹெரவிலுள்ள அதன் அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக, அவர் தெரிவித்துள்ளார். இதன்...
கொழும்பு, பேலியகொட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் மன்னார், புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு பேலியகொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதியானவரே இவ்வாறு மன்னார் புதுக்குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்துள்ளார். குறித்த நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மன்னார் மாவட்ட...
இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து...
கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள் அறிவித்தல் வரும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்துடன் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர மோட்டார் வாகன...
சிங்கள் பெளத்த ஆட்சியினுடைய உக்கிரமான நிலைப்பாடுதான் 20 வது திருத்த நிறைவேற்றம் எனத் தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் இனப் பிரச்சினைக்கான தீர்வை நேக்கிய பயணத்தை ஒன்றிணைந்து மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார். 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...
கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பொரளை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியொன்றில் இருந்து இன்று நண்பகல் பொரளை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். https://www.jaffnajournal.com/archives/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f.html
கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளி ஒருவர் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது அவரை அடையாளம் காண்பவர்கள் உடனடியாக 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். 26 வயதுடைய அந்த நபர் கொஸ்கம வைத்தியசாலையில் உள்ள கோவிட் -19 சிகிச்சை...
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேர் திடீர் சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம்...
மல்லாகம் நீலியம்பனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பெண் உள்பட இருவரைத் தாக்கியதுடன் வீட்டிலிருந்த பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 வாள்கள், கோடாரி...
அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் தொடருந்து சேவைகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் பயணிகளிடம் கேட்டுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்ததாவது; கோவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக தொடருந்து சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் மிகக் குறைவான மட்டத்தில் காணப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு அதிவேக தொடருந்து...
Loading posts...
All posts loaded
No more posts
