- Saturday
- April 25th, 2026
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 47 உறுப்பு நாடுகளைக்கொண்ட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்,...
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவையை அடிப்படையாக கொண்டே குறித்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன குறிப்பிட்டார். எண்ணெய் மற்றும் வெண்ணெய்க்கு அதிக வரி...
புத்தாண்டு காலங்களில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இயல்பாக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மேலும் இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார். பொருட்களுக்கான விலை தள்ளுபடி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் என்பன அதிகளவிலான...
ஜெனீவா பிரேரணை தொடர்பில் மற்றைய இஸ்லாமிய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவே பிரதம மந்திரி பங்களாதேஸ் சென்றுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வவுனியா குளம் மற்றும் சுற்றுலா மையம் என்பவற்றை பார்வையிட்ட பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்....
தேசிய அடையாள அட்டைகளை விரைவாகப் பெற சிறப்பு முன்பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்புடைய திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யலாம். மேலும், ஏற்கனவே விண்ணப்பங்களை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த தொலைபேசி எண்களை...
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 3 பேரும் மன்னாரில் ஒருவரும் கோவிட் -19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 294 பேரின் மாதிரிகள்...
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்கும் நடவடிக்கையைதொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932 ஆண்டு உறுதியின்படி-...
இந்த அரசாங்கத்தை திட்டமிட்டு குறை கூற வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், நாடாளுமன்ற பிரதி குழுக்களின் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆறுகளை பாதுகாப்புாம் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு நேற்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், இந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கோவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றுமாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் இன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்...
கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறையினால் போராட்டம் இன்று (திங்கட்கிழமை)ஆ ரம்பமானது. குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதல் குறித்த வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், முன்னாள் வடக்கு...
10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி அவர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தினால் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 14 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10 ஆயிரம் பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து,...
ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் விரும்புகின்றோம். எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான வல்லுநர் குழுவுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே கட்டமைப்பின் தலைவர்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமாலை அந்த நோயாளியிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு மருத்துவ சேவை வழங்கிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கே...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொருட்கொள்வனவில் ஈடுபடுவர்கள் , கொவிட்- 19 வைரஸ் பரவல் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இக்காலப்பகுதிகளில் பின்பற்றபட வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் , சுற்று நிரூபமொன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது...
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நல்லூர் சுகாதார மருத்துவ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “ஒருசில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் ஊடகத்துறைப் பற்றி ஒரு பாரிய எச்சரிக்கையை ஜனாதிபதி விடுத்துள்ளார்....
சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேரா யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்துள்ளார். அவரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வரவேற்றார். வடக்கு மாகாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள சட்ட மா அதிபர் இன்று காலை மன்னாருக்கு வருகை தந்தார். அங்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதிக்கான...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாகஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவுகள் சங்கத்தின் தலைவி ஜே.கனகரஞசினி...
கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தொழில்களை இழந்தோர்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காலப்பகுதியில் சுயதொழில்களை மேற்கொள்ள முடியாது போனமை, தொழில் தருநர்களால் தொழில்களை இழந்தமை அல்லது கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் வேறு சிரமங்கள் காரணமாக சுய தொழில்களை இழந்த தனியார் பிரிவுகளில்...
Loading posts...
All posts loaded
No more posts
