லொறி சாரதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை!!

கொழும்பு- பன்னிபிட்டிய வீதியில், லொறி சாரதியொருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள,மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரியை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தண்டனை சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென...

யாழ்.நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மீண்டும் அகழ்வு நடவடிக்கையில்!!

யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபைக்குட்பட்ட புத்துார் - நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மீண்டும் அகழ்வு பணிகளை தொடங்கியிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகின்றது. நிலாவரை கிணற்றை அண்மித்த பகுதியில் கடந்த மாதம் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பினால் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மீளவும் குறித்த பகுதிக்கு வந்துள்ள தொல்லியல்...
Ad Widget

யாழ். மாநகரின் மத்திய பகுதியில் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினம் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது. யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற...

முதலாம் தவணை பாடசாலை விடுமுறை ஏப்ரல் 9இல் ஆரம்பம்

முதலாம் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் அனைத்தும் ஏப்ரல் 19ஆம் திகதி திறக்கப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்துத் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மார்ச் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி...

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தேசிய நீதிமன்றங்கள் ஊடாக சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதை உறுப்புநாடுகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட...

யாழ். மாநகரின் மத்திய பகுதி முடங்குகிறது- விசேட கலந்துரையாடலில் தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்த அவசர கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) மாலை யாழ். அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, யாழ். மத்திய பேருந்து நிலையம் கோட்டைப் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது....

வடக்கில் ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் 66 பேர் யாழ்ப்பாணம் மாநகர மத்தி நவீன சந்தைப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 677 பேரின் மாதிரிகள்நேற்று (வியாழக்கிழமை)...

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க எச்சரிக்கை விடுப்பு!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் யாழ். மக்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அதிபர், “யாழ். மாவட்டத்தில் அண்மைய...

யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதில், மாவட்ட கமநல...

தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த

தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு!!

யாழ். மாநகர சபையின் முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், யா. மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, யாழ்ப்பாணம்...

வடக்கில் கோவிட்-19 நோய்த்தொற்றால் 11ஆவது நபர் உயிரிழப்பு

வடக்கு மாகாணத்தில் கோவிட் -19 நோயால் 11ஆவது நபர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 82 வயதுடைய முதியவர் ஒருவரே நேற்றையதினம் உயிரிழந்தார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் கோவிட் -19 நோயால் வடக்கு மாகாணத்தில் கடந்த 4 மாதங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் 5...

நெடுந்தீவு வைத்தியசாலை குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும்

நெடுந்தீவு மக்களின் பொது வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த வைத்தியசாலை தொடர்பில் உள்ள பிரச்சினைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்கான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் சபையில் கேட்ட வாய் மூலமான கேள்விக்கு அமைச்சர்...

திருநெல்வேலி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல்வரை மூடல்!!

திருநெல்வேலி போதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின்...

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழில் திறந்து வைப்பு!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில்நேற்று (புதன்கிழமை)காலைதிறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை புற்றுநோயியல் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகை தந்து திறந்துவைத்தார் . இது குறித்து கருத்து தெரிவித்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர்...

யாழில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் 24 பேருக்கும் உடுவில் மற்றும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை யாழ். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மூவருக்கும் யாழ்ப்பாணம்...

யாழ். மாநகர சபையின் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது

யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்ட நிலையில் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது....

சுயதனிமைப்பட்டார் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்!

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சுயதனிமைப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வி.மணிவண்ணனின் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வு கடந்த 20ஆம் திகதி பருத்தித்துறையில் நடந்தது. அதில் மணிவண்ணனும் கலந்து கொண்டார். அந்த நண்பருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்ட...

யாழ்.மாநகர சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று...

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவில்...
Loading posts...

All posts loaded

No more posts