புத்தூர் கொலை சம்பவத்தில் தேடப்பட்டவரே தமிழகத்திற்கு தப்பிச் சென்றார்!

தமிழகத்தில் நேற்றையதினம் கைதான இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு கண்ணாடிஇழை படகுமூலம் சென்ற இரண்டு இளைஞர்கள், சுங்கத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பிரதாப், நாகேஸ் என தம்மை கூறியதுடன், மன்னார், அடம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர். மன்னாரிலிருந்து அவர்கள் சட்டவிரோதமாக தப்பி சென்றிருந்தனர். அவர்களின்...

இராமநாதன் கல்லூரி கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்!

மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். கல்லூரியின் அதிபர் , ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டமையை அடுத்தே பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் எதிர்வரும் 19ஆம் திகதியே...
Ad Widget

இன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி...

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 29ஆம்...

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் மணிவண்ணன்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொற்று நோய் சிகிச்சை மையத்தில் மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தொற்றிலிருந்து மீண்டுள்ள அவர், சிகிச்சை மையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

நாட்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை!

பொதுமக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதேநேரம்,...

ஜோசப் அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் – சம்பந்தன்

முன்னால் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், “ஆண்டகை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர். மக்களோடு மிகவும் நெருங்கிப்பழகிய ஆயர் அவர்கள் தமிழ்...

தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில் வாய்ப்புடனான பட்டப்படிப்பு

வரலாற்றிலே முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் computer science தொடர்பான புதிய தொழில்...

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் மருதனார்மடம் சந்தை வியாபாரி என்று அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 756 பேரின் மாதிரிகள் நேற்று...

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதி படுத்தியுள்ளார். நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர்...

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொரோனா தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகரில் கருவாட்டுக் கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா வைரஸ்...

வடக்கில் 22 பேருக்கு கோரோனா தொற்று; யாழ்.மாநகர வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த 14 பேர் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 27 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் மேலும் 29 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 320 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு...

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பாக மாவை தலைமையில் ஆராய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு- வெல்லாவெளி பகுதியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில், மாவை சோ.சேனாதிராஜாவுக்கும் அக்கட்சியின் மட்டு.பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை)இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம் அமைந்த பகுதியில் ஐவர் கைது!

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட நடவடிக்கை இடம்பெறுவதாக இராணுவப் புலனாய்வாளர் மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி...

திருநெல்வேலியில் முடக்கப்பட்ட பகுதிக்குள் 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை!!

கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கு குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது 127 பேர் கொரோனா தொற்றுக்கு...

பொலிஸாரால் தாக்கப்பட்ட மலையக தமிழ் இளைஞன் பொலிஸாரால் கைது!!

மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தரொருவர் இளைஞரொருவரை தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தெரியவருகிறது. இவர் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு சென்றுள்ளார். மஹரகம...

கோவிட் -19 தடுப்பூசியை யார் எல்லாம் ஏற்றிக்கொள்ளலாம்? – மருத்துவ வல்லுநர் குமணன் விளக்கம்

பேராசிரியர். தி.குமணன் பொது மருத்துவ வல்லுநர் மருத்துவத் துறை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம். கோவிட் -19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் உபயோகம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ உலகம் கருதுகின்றது. ஆனால் யாரெல்லாம் இந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்பதில் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகமும் பீதியும் நிலவுகின்றது. அண்மையில் புதுடில்லியின் பொது மருத்துவ வல்லுநர்களின்...

யாழ். பல்கலைக் கழகத்தில் மேலும் இரண்டு பீடங்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகிய இரண்டையும் பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு கடந்த வருடம் யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் சிபார்சுடன் துணைவேந்தரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் கடந்த மாதம் இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இணையத்தளம் மற்றும் யூடியுப் ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 35 வயதான பெண்ணொருவரும் 36 வயதான ஆணொருவரும் இவ்வாறு, நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

முகப்புத்தகத் தொடர்பு – யாழ்.ஊடகவியலாளரிடம் விசாரணை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவரையே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிற்கு அழைத்து விசாரணை செய்த பின்னர் விடுவித்துள்ளனர். புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபருடன்...
Loading posts...

All posts loaded

No more posts