Ad Widget

வடமராட்சியில் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்தார் நாமல்!!

வடமராட்சி, முள்ளியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த தொழிற்சாலையின் ஊடாக பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென கூறப்படுகின்றது.

இலங்கையிலுள்ள 9 மாகாணத்துக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்துக்கான திட்டம், கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts