Ad Widget

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு! புதிதாக 2028 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று!!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

இவ்வாறு மரணித்தவர்களில் 27 ஆண்களும் 20 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் புதிதாக 2028 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 39 ஆயிரத்து 689ஆக அதிகரித்துள்ளது.

Related Posts