Ad Widget

நாட்டில் மேலும் 70இற்கு மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு! 2,000இற்கு மேற்பட்டோருக்குக் தொற்று!!

நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

இவ்வாறு மரணித்தவர்களில் 33 ஆண்களும் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 2093 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து 913ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த இரண்டாயிரத்து ஒன்பது பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக இரண்டு இலட்சத்து ஒன்பதாயிரத்து 296 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

Related Posts