Ad Widget

பயணத் தடையை நாளை நீக்காமல் தொடரவேண்டும் – மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

பயணக் கட்டுப்பாடுகளை நாளை நீக்காமல் தொடருமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபரி கோதபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளது.

சங்கம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், சில நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டது போன்று நாடு மோசமான சூழ்நிலைக்கு திரும்பும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகளை இந்த மாதம் 28 ஆம் திகதிவரை நீட்டிக்குமாறு தொழிற்சங்கம் முன்பு கோரியிருந்தது.

21 முதல் 23 வரை சில நாட்களுக்கு போக்குவரத்து தடைகளை நீக்குவதற்கான அடிப்படை என்ன என்பது தெளிவாக இல்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமும் 2,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மருத்துவ சங்கம், இலங்கையில் வேகமாக பரவி வரும் டெல்டா கோவிட்-19 விகாரத்தை எதிர்கொள்ளும் ஆபத்து அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இந்த முக்கியமான தருணத்தில் கட்டுப்பாடுகளை நீக்காமல் நடவடிக்கையைத் தொடருமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இல்லையெனில், மூன்று வார காலமாக பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியன் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த செய்த தியாகங்கள் வீணாகிவிடும் என்று அந்தச் சங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.

Related Posts