தடைசெய்யப்பட்ட பால்மாக்கள் பதுக்கி வைத்திருந்தால் தண்டனை

ரசாயன பதார்த்தம் உள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 4 வகையான பால்மா வகைகளும் சந்தையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டு விட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)

இன-மத அடையாளங்களை பாதுகாக்க தமிழ்-முஸ்லிம் ஒன்றிணைவு அவசியம்; த.தே.கூட்டமைப்பு

தேசிய இன, மத அடையாளங்களைப் பாதுகாக்க அனைத்துத் தமிழ், முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்புக்களை வெளிக்காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, (more…)
Ad Widget

வடக்கில் ஜனாதிபதி தலைமையிலேயே பிரசாரம்!

வட மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலேயே பிரதான பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது (more…)

யாழ்.கல்வி அதிகாரிகளை கட்டாயப்படுத்தும் ஆளுநர்; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

வீரசிங்கம் மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்குப் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரை வருகை தருமாறு வடமாகாண ஆளுநர் கட்டாயப்படுத்தியுள்ளார் என்று (more…)

சலுகை அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்

எங்களுடைய போராட்டங்கள் எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் சலுகை அடிபடியிலேயே தமிழ் மக்களை கவனித்து வந்திருகின்றது. சலுகை வளங்குகின்றவர்கள் அதை எந்த காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திவிடலாம். (more…)

2 ஆயிரம் லீற்றர் டீசல் கிணற்று நீருடன் கலப்பு

கல்வியங்காட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பல கிணறுகளில் நீருடன் டிசல் கலந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். (more…)

யாழ். கொழும் பஸ்ஸில் பயணித்த பெண்ணின் 25 பவுண் நகை மாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 30 ஆம் திகதி கொழும்பு சென்ற தனியார் பயணிகள் சொகுசு பஸ்ஸில் வந்த பெண்ணொருவரின் கைப்பையிலிருந்த 25பவுண் நகை காணாமால் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்கள் போராட்டம்

யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறையின் சித்திரமும் வடிவமைப்புத் துறை மாணவர்கள் நேற்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். (more…)

விரிவுரையாளர் தாக்கியதில் மாணவன் படுகாயம்

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தாக்கியதில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

நல்லூரில் கைத்தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் தொடர்பான கண்காட்சியும், விற்பனையும் இன்றிலிருந்து எதிர்வரும் 5 ம் திகதி வரை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. (more…)

13 வயது சிறுவனை காணவில்லையென முறைப்பாடு

மாலைநேர வகுப்பிற்கு சென்ற சிறுவனை காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார். (more…)

மொழி உரிமைமீறல் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் உடனடியாக முறையிடவும்

பொலிஸ் நிலையங்களில் மொழி உரிமை மீறப்பட்டால் அது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிடம் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் TNA வெற்றி பெற்றாலும் அரசை தோற்கடிக்க முடியாது – விமல் வீரவன்ச

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தாலும், அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். (more…)

யாழ். கொட்டடியில் இளைஞன் மீது வாள் வெட்டு

கொட்டடியில் இளைஞன் ஒருவன்மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில், குறித்த இளைஞனின் இடது கையும் காலும் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

பயங்கரவாதத்தை இந்த அரசாங்கமே உருவாக்குகிறது: ச.துர்க்கேஸ்வரன்

பயங்கரவாதத்தை அரசாங்கமே உருவாக்குகிறது என காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் ச.துர்க்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். (more…)

பசுபிக் ஏஞ்சல் நிகழ்ச்சித் திட்டம் நிறைவு

ஸ்ரீலங்கா விமான படையின் ஏற்பாட்டில் யாழில் அமெரிக்க படையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த 'பசுபிக் ஏஞ்சல்' நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை நிறைவுபெற்றுள்ளது. (more…)

கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் அரசுடன் இணைவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினரான சிவகுமார் அரசாங்கத்துடன் இணைத்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். (more…)

அடுத்த மாதம் முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)

பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் இந்த வருடத்துடன் நிறுத்தப்படுகின்றது!

ஆசிரியர்களின் தொழில்சார் கல்விக்கும் வாண்மை விருத்திக்கும் தனித்துவமான முறையில் கடந்த 55 வருடங்களாகச் செயற்பட்டு வந்த பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் இந்த வருடத்துடன் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

விகாரை மீதான தாக்குதலின் பின்னணியில் இராணுவம்: சுரேஷ்

நாவற்குழியில் விகாரை மீதான கைக்குண்டு தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts