- Friday
- October 16th, 2026
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அடை மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட மக்களிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தினால் அவசரகால உதவிகள் வழங்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும்...
உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இலங்கை பல்கலைக்கழக வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட மாணவன் எம்.என்.சித்திக் உள்ளடங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கல்வி அலகு பணிப்பாளர் கே.கணேசநாதன் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார். உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி வியாழக்கிழமை (05) தொடக்கம் எதிர்வரும் 8 ஆம்...
யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த றொஹான் டயஸ், நேற்று வெள்ளிக்கிழமை (05) முதல் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக, கொழும்பு தலைமை பொலிஸ் திணைக்களத்தில்...
நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம்.அஸ்வர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற விவகாரங்கள், வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் தொடர்பாடலுக்கான ஜனாதிபதியின் சிரேஷ் ஆலோசகராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வழங்கப்பட்டது.
நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் 7 ரூபாயினாலும் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் மருதனார்மடத்தில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது....
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கான பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை...
கடந்த தீபாவளிக்கு வெளிவந்த கத்தி திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. இப்படம் வெளிவந்த 12 நாட்களில் ரூ 100கோடி வசூல் செய்தது.சமீபத்தில் தான் இப்படத்திற்கு பாசிட்டிவாக லைகா பெயரை இனி பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு வந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது வரை பல இடங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.இதுவரை வசூல் சுமார் ரூ 125...
சூரி மற்றும் ரோபோ சங்கர் இருவரின் காமெடியில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் ‘சவரிக்காடு’. இதில் கதாநாயகர்களாக ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். இப்படத்தை அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கி வருகிறார். படத்தைப் பற்றி எம்.என்.கிருஷ்ணகுமார் கூறும்போது, “இந்த படத்தின்...
வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய நிலையில் இயற்கை எய்திய யு. எல். எம். ஹால்தீன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (04.12.2004) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. வடக்கு விவசாய அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற...
விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்களால் அடகு வைக்கப்பட்ட மற்றும் படையினரால் கண்டெடுக்கப்பட்ட நகைகளை அவர்களுக்கு மீளக் கையளிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அயிரத்து 960 பேருக்கு தங்க நகைகள் மீளளிக்கப்பட்டன. மன்னாரைச் சேர்ந்த 223 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த 319 பேருக்கும்,...
யாழ். கொடிகாமம், இயற்றாலை பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து கிளைமோர் ஒன்று வியாழக்கிழமை (04) மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தனர். மேற்படி காணி உரிமையாளர், தனது காணியை துப்பரவுபடுத்திக்கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதை அவதானித்து பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இராணுவத்தினரின் 522ஆவது படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் அவ்விடத்துக்கு சென்று...
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'இந்த யுத்தத்தை நடத்தியதும் அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. யுத்தத்தின் 75 சதவீதமானவை எங்களது, அரசாங்கத்தின்போதே வெற்றிகொள்ளப்பட்டது. நாம்...
இம்முறை ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனேயே நான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (05), அலரி மாளிகையில் வைத்து தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்தார். 'நான் போட்டியிடுவது சந்திரிகாவுடனேயே. இது மங்கள – சந்திரிகா ஒற்றுமையாகும். ரணிலுக்கு இன்னும்...
யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஏற்பாட்டில் கூட்டுறவு பெரியார் அமரர் வீரசிங்கத்தின் 50ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்ட கூட்டுறவு சபைத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும்...
யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னணியில் எந்தவித உள்நோக்கமோ அரசியலோ இல்லை நல்நோக்கமே உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 59 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பில்...
யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற போது யாழ்ப்பாணத்து நீர் மாசடைதலை தடுக்க வேண்டும் என்ற...
தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை அரச புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஐந்து வருடங்களுக்கு பின்னர், சாம்பல்தீவில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. சாம்பல்தீவு மற்றும் நிலாவெளியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரினால் இவர்...
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் எஸ்.டி தட்சணாமூர்த்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டனர். அதனையடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என...
தமிழர் வரலாறுகளுக்கு தற்போது பாடப்புத்தகங்களில் மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் சந்ததியினருக்கு எமது வரலாறுகள் அறிந்து கொள்வதற்கு தனிநூல் ஒன்றினை உருவாக்க வேண்டும் என உறுப்பினர் பரஞ்சோதியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வடக்கு அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு அவையின் 20 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போதே உறுப்பினர் குறித்த பிரேணையினை முன்வைத்தார். மேலும் பிரேரணையில்...
Loading posts...
All posts loaded
No more posts
