Ad Widget

வடக்கில் அதிகளவு இராணுவத் தலையீடுகள் – கமலேஷ் சர்மா

சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்களிப்பு குறைக்கப்படவேண்டும் என பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

Kamalesh Sharma,1

வட மாகாண மக்களையும் அவர்கள் தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகளையும் வலுவூட்டவேண்டியது அவசியமாகும். அத்துடன் மக்களின் சட்டபூர்வ உரிமையான நடமாடுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியப்படாமல் நிரந்தர நல்லிணக்கத்தை அடைய முடியாது. எனவே அரசாங்கம் அதன் நல்லிணக்க செயற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

உள்நாட்டில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கப்படுகின்றது. அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் விசாரணையை நடத்துகின்றது. இந்த இடத்தில் இரண்டு விசாரணைகளினதும் நோக்கமானது உண்மையை கண்டறிவது என்பதாகும். எனவே இந்த உண்மையை கண்டறிவது என்பதே இங்கு முக்கியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தேர்தல் திணைக்களம் முழுமையான சுயாதீனத்துடன் இயங்கவில்லை எனபதனை பொதுநலவாய கண்காணிப்பாளர்களின் பரிந்துரை செய்திருந்தனர்.

அந்தவகையில் தேர்தல் திணைக்களம் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் நான் நடத்திய பேச்சுக்களின் விளைவாக இலங்கையில் நடைபெறவுள்ள தேசிய மட்டத் தேர்தல்களுக்கு பொதுநலவாய அமைப்பின் கண்காணிப்பாளர்களை ஈடுபடுவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts