Ad Widget

‘லைக்கா’ சுபாஸ்கரன் கைதாகி விடுதலையா?

கத்தி திரைப்பட சர்ச்சையில் சிக்கிய லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக சில செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

lyca-subaskaran-kaththy

இது தொடர்பாக இலங்கை செய்தி இணையதளங்களில் வெளியாகி உள்ள தகவல் விவரம்:

லைக்கா தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைவரும் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த லைக்கா குழுமத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமியும் கைது செய்யப்பட்டார்.

கத்தி படம் வெற்றி பெற்றதனை அடுத்து லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலத்தீவு சென்று தங்கியுள்ளார்கள்.

மாலத்தீவில் இருந்து இங்கிலாந்து திரும்பும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றது.

மாலத்தீவில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்ட விமானம் கொழும்பில் நின்ற போது இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. பின்னர் இங்கிலாந்து தூதரகத்தின் நெருக்கடியால் இருவரும் பல மணி நேரத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு அந்த இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுபாஷ்கரன் இங்கிலாந்தில் வசித்து வரும் தமிழ் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts