- Sunday
- July 5th, 2026
உக்ரைனில் உலகின் மிகப்பெரிய அம்மோனியா குழாய் வெடித்து விஷ வாயு காற்றில் கலப்பதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள Masiutovka கிராமத்தில் செல்லும் குழாய் வெடித்து அப்பகுதி எங்கும் மேக மூட்டமாக வாயு காற்றில் கலப்பது காணொளி ஒன்றில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக குறித்த குழாய் வெடிப்பு நேர்ந்திருக்கலாம் என்று...
சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயான 100 வது விமானசேவை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விமானசேவை மூலம் இதுவரை 10,500 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கொரோனாத் தொற்று இடர்காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமானசேவைகள் பின்னர் 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையானது...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகள் குறித்து தம்மிடத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற...
மருதங்கேணியில் பொலிசார் துப்பாக்கி முனையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை அச்சுறுத்திய விவகாரத்தில் விளக்மறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று (7) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டஆலோசகர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்ச நீதிமன்றம் இருவரையும் பிணையில் விடுவித்தது. அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அடம்பிடித்த பொலிசாருடனான சச்சரவை ஒளிப்படம் பிடித்த, பொலிசார் துப்பாக்கியை நீட்டி...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்தள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் ஊடாகவே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பகுதியில், கடந்த 3 ஆம்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவரை அழைத்து வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை மீறப்படக்கூடாது என சபாநாயகர் என்ற...
நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார்....
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு செல்லும் நிலையில் இந்த அழைப்பு பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ளது என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்க உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சபாநாயகரிடம்...
முல்லைத்தீவு-வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றிசெல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் மருதங்கேணி...
யாழ்ப்பாணம்-மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மக்கள் சந்திப்பு இடம்பெற்ற இடத்தை அண்மித்து சாதாரண தர பரீட்சை மத்திய நிலையம் அமைந்திருந்த நிலையில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையிலேயே...
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள். நாகஞ்சசோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (05.06.2023) அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர் புதையல் தோண்ட முற்பட்ட 8...
ரஷ்ய இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலை ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படை சிறைப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. பக்முத்-தில் இருந்து வாக்னர் படைகுழு வெளியேறும் வழியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்ததாக வாக்னர் படை குழுவின் தலைவர் பிரிகோஜின்(Prigozhin) குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பக்முத் இருந்து வெளியேறும் போது வாக்னர் PMC படை மீது வெடிகுண்டு...
தியாகி பொன்.சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (05) மதியம் 12 மணியளவில் மாணவர்களால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன் சிவகுமாரனது உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஹயஸ் வாகனம் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (4) நள்ளிரவு 12 மணியளவில் கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையில் 212வது கல்லு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் முன்னால்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ கற்கைகள் மற்றும்...
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஜுன் இரண்டாம் திகதி மருதங்ககேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்ததாக அருள்மதியின் கணவர் தெரிவித்துள்ளார். மருதங்கேணி பொலீசாரினால் அருள்மதிகைது செய்யப்பட்டுள்ளார்.. தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிரான...
உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுவன் ஒருவன், உயிர் கொல்லி...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை விரைவில் வழங்குமாறு யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி...
Loading posts...
All posts loaded
No more posts
