- Sunday
- July 5th, 2026
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - முள்ளியானை சேர்ந்த சுந்தரலிங்கம் நிதர்சன் (21) என்ற இளைஞன் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களை CID எனக் கூறிய 10 பேர் கொண்ட குழு மருதங்கேணி சந்தியில் வைத்து இவர்களை வழி மறித்துள்ளார்கள். அருகில் நின்ற மோட்டார் சைக்கிளை காட்டி இது யாருடையதென கேட்டதாகவும், நாங்கள் முள்ளியானை சேர்ந்தவர்கள்...
உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோவில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ரஷ்யா மீண்டும் ஒரு பயங்கரவாத நாடு என்பதை நிரூபித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது டெலிகிராம் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இரண்டு...
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (1) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் காலை 9.30 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரண கர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது...
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான, விமான சேவைகளை ஏழு நாட்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்...
யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மயானத்தில் நிறுவுவதற்கு ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி நிறுவுவதற்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதி உதவி வழங்கியிருந்தது. எரியூட்டி அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதில் நீண்ட இழுபறி நிலவியது. ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள்...
உக்ரைன் தலைநகர் கீவ்வில், பரபரப்பான சாலை ஒன்றில், ஏவுகணை ஒன்று வந்து விழுவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கார் ஒன்றின் டேஷ்கேம் கமராவில் பதிவாகியுள்ள அந்த காட்சியில், 11.22 மணியளவில், வானிலிருந்து ஏவுகணை ஒன்று சாலையில் வந்து விழுவதைக் காணலாம். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள், அந்த ஏவுகணை தங்கள் மீது...
வலி வடக்கு, தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவ நடவடிக்கை மூலம் பலவந்தமாக கைப்பற்றி பௌத்த விகாரை அமைக்கப்பட்டதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை புறந்தள்ளி விகாரை கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உடனடியாக அமுல்ப்படுத்த வேண்டுமென மக்கள் பிரதிநிதிகள்...
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்...
சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட மாணவரை இளைஞர்கள் குழுவொன்று தலைக்கவசத்தால் தாக்கியுள்ளது. நெல்லியடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு , வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் , பாடசாலைக்கு...
எங்களின் அடுத்த இலக்கு பிரித்தானிய அரசு அலுவலர்கள் என ரஷ்ய ஜனாதிபதி புடினின் அரசியல் ஆதரவாளரான ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவருமான டிமிட்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக...
நாங்கள் உக்ரைனிலுள்ள கட்டுப்பாட்டு மையங்களை தாக்குவது குறித்து பேசினோம். பதிலுக்கு உக்ரைன் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அது ரஷ்யாவையும், ரஷ்யக் குடிமக்களையும் அச்சுறுத்த மக்கள் வாழும் வீடுகளை தாக்க முடிவு செய்துள்ளது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே...
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, பிரமிட் திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய...
யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்காக செயற்படுவதாக சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பாக கருத்துரைக்கும் போதும் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவதற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றது...
இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்....
காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டில் யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு கொடிகாமம் இத்தாவில் பகுதியில் போலியான கையெழுத்திட்டு உறுதி...
வீதி விபத்துகளை தடுக்க யாழ்.மாவட்டத்தில் இன்று(31.05.2023) முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“யாழ்ப்பாண குடா நாட்டில் மே மாதம் மாத்திரம் 10ற்கும் மேற்பட்ட வீதி விபத்து சம்பவங்கள்...
உக்ரைன் சமூக ஊடக பிரபலம் ஒருவர் முக்கியமான இராணுவ வைத்தியசாலையொன்றின் இட அமைவை வெளியிட்ட சில மணி நேரத்தில் ரஷ்யா குண்டு மழை பொழிந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 600,000 பின் தொடர்பாளர்களை கொண்ட பெண் பிரபலம் Dnipro பகுதியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனையை குறிப்பிட்டு, உடனடி உதவி...
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்ப குறியீடு, மனித உடல் உணரும் வெப்ப அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்.நகரில் விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்றைய தினம் (29.05.2023) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும்...
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய இரண்டு நகரங்களின் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கிய்வ் நகர் மீது, நேற்றிரவு ரஷ்யா தாக்குதல் நடத்தியதையடுத்து அப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கு நகரமான க்மேல்னிட்ஸ்கியில் உள்ள அதிகாரிகள், ரஷ்ய...
Loading posts...
All posts loaded
No more posts
